ராமநாதபுரம் திருப்புல்லாணி அருகே சேதுக்கரை தெற்கு கடற்கரையில் இன்று அதிகாலையில் மர்மமாக இறந்த நிலையில் ஒரு எட்டு வயது பெண் கடல் பசு கரை ஒதுங்கியது. அசாதாரண காட்சியைக் கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே கீழக்கரை வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
வனத்துறையினர் விரைந்து சென்று சுமார் 300 கிலோ எடையுடன், 115 செ.மீ அகலமும் 230 செ.மீ சுற்றளவுமுள்ள அந்த அரிய உயிரினத்தை ஆய்வு செய்ய கால்நடை மருத்துவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கடல்பசு பாறைகளில் மோதியதாலா அல்லது வயது மூப்பின் காரணமாக உயிரிழந்ததா என்பது தொடர்பில் பிரேத பரிசோதனைக்குப் பிறகே உண்மை வெளிச்சத்துக்கு வருமென வனத்துறையினர் தெரிவித்தார்.
மனிதர்கள் அரிதாகக் காணும் இந்த கடல் பசுவின் மரணம் கடற்கரை கிராமங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

