பேஸ்புக், ரிக்ரொக்கை திறந்தாலே போதும்… கையை ஆட்டி, ஆக்ரோஷமாகப் பேசி, தன்னை ஒரு மாபெரும் தமிழ் தேசியப் போராளி போலக் காட்டி, தினமும் வீடியோக்களை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார் ஒரு நபர்.
“அடடா, தமிழினத்துக்காக என்னமாய் உருகுகிறார்!” என்று அவரது உணர்ச்சிப் பேச்சைக் கேட்டு நீங்கள் உருகிக் கொண்டிருந்தால், சற்று நில்லுங்கள்… உங்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது!
ஏனெனில், இன்று ஆன்லைனில் ‘படா’ தேசியவாதியாக வலம் வரும் இந்த நபரின் முகநூல் பெயர் சுகிர் முல்லை. இவரது உண்மையான முகம் என்ன தெரியுமா? பிரான்ஸ் காவல்துறையினரால் நள்ளிரவு வேளையில் கதவு உடைத்து கைவிலங்கு மாட்டப்பட்டு, சிறைக் கம்பி எண்ணிய ஒரு பக்கா மோசடிப் பேர்வழி!
பிரான்ஸில் சொகுசாக வாழ்ந்து கொண்டு, புலம்பெயர்ந்த அப்பாவிக் தமிழ் மக்களின் பலவீனத்தை முதலீடாக்கினார் இந்த சுகிர் முல்லை.
“பிரான்ஸிலிருந்து உங்களை அந்த நாட்டுக்கு அனுப்புகிறேன், இந்த நாட்டுக்கு அனுப்புகிறேன்” என ஆசைவார்த்தை கூறி, பலரை ஏமாற்றியுள்ளார்.
போலி ஆவணங்கள், சட்டவிரோத வழிகள் எனப் பலரையும் நம்பவைத்து, அவர்களிடம் இருந்து பல லட்சம் பணத்தைச் சுருட்டி நடுத்தெருவில் தவிக்கவிட்டுள்ளார்.
கடைசியில் பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த புகார்களின் பேரில், பிரான்ஸ் போலீஸார் இவரை அமுக்கிப் பிடித்து உள்ளே தள்ளினர். சட்டத்தின் சில சந்து பொந்துகள் மற்றும் தற்காலிக விடுவிப்பு மூலம் இவர் தற்போது வெளியே சுற்றிக் கொண்டிருந்தாலும், ஏமாந்த மக்களின் சாபமும், வழக்குகளும் இவரை இன்னும் துரத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
தவறு செய்பவர்கள் பொதுவாக முகத்தை மூடிக் கொண்டு ஒளிந்து கொள்வார்கள். ஆனால், இந்த சுகிர் முல்லை ஒரு படி மேலே போய், தன் மீதான மோசடிப் புகார்களை மறைக்க ஒரு ‘மாஸ்டர் பிளான்’ போட்டார். அதுதான் தமிழ் தேசிய முகமூடி!
சிறையிலிருந்து வெளியே வந்ததும், நேரே முகநூலுக்கு வந்துவிட்டார். பின்னணியில் உணர்ச்சிகரமான பாடல்கள், வாயில் தமிழ் தேசியம், கைகளில் ஆக்ரோஷமான அசைவுகள் எனத் தன்னை ஒரு சமூகப் புரட்சியாளராகக் காட்டிக் கொள்ளத் தொடங்கிவிட்டார்.
தான் செய்த மெகா மோசடிகளை மக்கள் மறந்துவிட வேண்டும் என்பதற்காகவே, இந்த ‘தேசியவாத’ நாடகத்தை இவர் கையில் எடுத்திருப்பதாக நெட்டிசன்கள் தற்போது இவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

