அண்மையில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் (CIABOC) புதிய பணிப்பாளர் நாயக நியமனத்துக்கு எதிராக இன்று (அக்டோபர் 7) பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மூவர் ஒன்று சேர்ந்து கண்டனம் வெளியிட்டு, விவாதத்தை பரபரப்பாக்கினர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், சாணக்கியன் ராசமாணிக்கம், தயாசிறி ஜயசேகர ஆகியோர் இந்த நியமனம் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியதுடன், இந்த நியமனம் சுதந்திரத்தையும், நியாயத்தையும் புறக்கணிப்பதாக நேரடியாகவே குற்றஞ்சாட்டினார்கள்.
அதாவது, ஊழலைத் தடுக்கும் மிக முக்கிய அமைப்புக்குக் கொடுக்கப்பட்ட இந்த நியமனம் நேர்மையற்றது எனப் பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார்கள்!

