“இலங்கை தமிழரை காப்பாற்ற பொது வாக்கெடுப்பை நடத்த வலியுறுத்துவோம்” என தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த வகையான நடவடிக்கையும் இதுவரை எடுத்திருக்கவில்லை.
இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், “இலங்கை தமிழரை காப்பாற்ற பொது வாக்கெடுப்பே தீர்வு அதை நடத்த வலியுறுத்துவோம்னு சொன்னீங்களே செய்தீங்களா என” என்று கேள்வி எழுப்பினார்.
இதுவரை நடைபெற்ற அரசியல் கூட்டங்களில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து விஜய் பொது வெளியில் கருத்து தெரிவிக்காமல் இருந்த நிலையில், இன்று வெளிப்படையாக பேசியது, இலங்கை தமிழருக்கு ஒரு அளவு ஆறுதலாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

