தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை நிர்வாகி பதவியேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தி ஆகின்ற நிலையில் வைத்திய சாலையில் இதுவரை எந்த அபிவிருத்தியும் செய்யவில்லை என்பதும், நோயாளிகளுக்கான தொடர்ச்சியான சிகிச்சைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் வைத்திய நிபுணர்களை, குறிப்பாக 24 மணித்தியாலங்களும் நோயாளிகளை பராமரிக்கின்ற விடுதி வைத்திய நிபுணர்கள்,குருதி சேகரிப்பு அலகு, புற்றுநோய் விடுதி, அவசர சிகிச்சை பிரிவு,சத்திர சிகிச்சை கூடம் என்பவற்றை சுயாதீனமாக இயங்கச் செய்வதில் முட்டுக்கட்டையாகவும், இவ் அலகுகளிற்கான தேவைகளை பூர்த்தி செய்யாமலும், ஏதேனும் அத்தியாவசிய உபகரணங்கள் தேவைப்படும் பொழுது இழுத்தடிப்பு செய்வதும், எல்லாவற்றிற்கும் மாகாண சுகாதார பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் ஆகியோர்களிற்கு அனுப்புமாறு எழுதுவதை தவிர வேறு கடமைகள் எதுவும் செய்வதாக தெரியவில்லை.
சிறப்பாக இயங்கி வந்த பிரேத பரிசோதனை சேவைகளை நிறுத்தி அப்பாவி ஏழை மக்களை பிரேதம் காவும் வண்டிக்கு 60,000 /=வரை செலவு செய்யச் செய்து யாழ்ப்பா வைத்தியசாலைக்கு அனுப்பி தனது கதிரைக்கு பாரமாக இருக்கும் இவர், வேலைக்கு வந்தால் வைத்தியசாலையை சுற்றி பார்ப்பதுமில்லை விடுதிகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதில்லை.
ஆனால் வைத்தியசாலை நிர்வாகி பதவிக்கு மட்டும் ஆசைப்படுவார். அதற்காக அவர் எவருடைய காலையும் பிடிப்பார், எந்த ஈனச் செயலையும் செய்ய கூடியவர்.
ஒரு சில தனிப்பட்ட பலவீனங்கள் உள்ள வைத்திய நிபுணர்களை தனது கைக்குள் வைத்துக் கொண்டு , அதாவது கடமை நேரங்களில் தனியார் வைத்தியசாலைகளில், பகலில் வேலை செய்யும் நிபுணர்களை அவர்களுடைய பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அர்பணிப்பாக கடமையாற்றுகின்ற வைத்திய நிபுணர்களையும், வைத்தியர்களையும் விரக்திக்கு உள்ளாக்குகின்றார். தனது பதவியை காப்பாற்ற விளக்கு பிடித்தல் வரை அறிந்த வித்தைக்காரர்.
இதற்காக வட மாகாண சுகாதார சேவையின் சாபக்கேடு, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் உடன் , நல்ல உறவை பேணி கொள்வதுடன் அவருக்கு தேவையான சில “அந்த “விடயங்களையும் செய்து கொடுத்து வருகிறார்.
மற்றும் சில பெண் சுகாதார உதவியாளர்களை அவர்கள் ஏதாவது சிறிய பிரச்சினைகளில் சிக்கும்போது மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் நேரடியாக அனுப்புகின்றார்.
சமன் இதற்கு கைமாற்றாக தனது நட்பு வட்டத்தில் உள்ள ஆட்டு இறைச்சி கடை ரஹீமின் அறிமுகத்தை செய்து வைத்துள்ளார். ரஹீமும் தன்னால் முடிந்தவரை தேவநேசரின் பதவியை காப்பாற்றி கொடுப்பதற்காக தனது குண்டர் படையை வைத்து முயற்சிக்கிறார்.மற்றும் தனது ஹொட்டலில் அவரது அந்தரங்க தோழிகளுடன்”சிறப்பு விருந்துகள்” நடைபெற்றிருக்கின்றன.
வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் எவ்வாறு தனது இயலாமையை மறைக்க எவ்வாறு இனவாதத்தை கையில் எடுத்து தனது தனது பதவியை காப்பாற்றுகின்றாரோ, அவ்வாறே தேவணேசனும் தனது பதவியை காப்பாற்ற மதப் பிரச்சினையை கையில் எடுப்பார் போல தெரிகிறது…. .
இந்த பதவியைக் காப்பாற்ற வைத்தியர் அர்ச்சுனாவை நாடி அவரை சிக்க வைக்கும் முயற்சியில் தேவநேசன் ஈடுபட்ட போதும் அர்ச்சுனா வலையில் சிக்கிவில்லை போலத் தெரிகிறது.
ஆக மொத்தத்தில் அர்ப்பணிப்புள்ள வைத்தியர்கள் இலவச மருத்துவத்தை காப்பாற்ற பலருடன் போராட வேண்டி உள்ளது…. .

