யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம்பெண் சட்டத்தரணியான நிவேதா, போலியான காணி உறுதி தயாரித்த குற்றச்சாட்டில் கைதானதை தொடர்ந்து, வடக்கு தழுவிய வேலைநிறுத்த பேராட்டத்துக்கு சட்டத்தரணிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
நாளை (07.10.257) வடக்கில் நீதிமன்ற செயற்பாடுகளிலிருந்து சட்டத்தரணிகள் விலகியிருப்பர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம்பெண் சட்டத்தரணியான நிவேதா போலியான காணி உறுதி தயாரித்த மோசடிக் குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.
போலியான காணி உறுதி தயாரித்த விவகாரத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள சில சட்டத்தரணிகளை பொலிசார் கைது செய்ய முயன்ற நிலையில், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த குருபரன் தலைமையிலான யாழ்ப்பாண சட்டத்தரணிகள், இந்த விசாரணைகளை இடைநிறுத்த கோரியிருந்தனர்.
இதன் பிரகாரம் விசாரணைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மீள விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கைதான இளம்பெண் சட்டத்தரணி நிவேதா புதியவர். அவர் மூலம் மூத்த சட்டத்தரணிகள் இந்த செயலை செய்திருக்கலாமென சட்டத்தரணிகள் வட்டாரத்திலிருந்து தகவல் வந்துள்ளது.

