Wednesday, June 18, 2025
HomeKisuKisuஒமந்தையில் அதிரடிப்படை வாகனம் மோதி 32 வயதான திவியன் பலி

ஒமந்தையில் அதிரடிப்படை வாகனம் மோதி 32 வயதான திவியன் பலி

வவுனியா – ஒமந்தையில் இன்று நிகழ்ந்த பயங்கர விபத்து, மக்கள் மனதை உலுக்கிய சம்பவமாக மாறியுள்ளது. ஓமந்தை இலங்கை வங்கிக்கு அருகே, விசேட அதிரடிப்படையின் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், ஒரு உயிர் பறிபோனது!

வீதியின் மறுபக்கம் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது, அதிரடிப்படையின் வாகனம் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதே நேரத்தில், வீதியின் அருகே நின்ற ஒருவர் கூட இந்த மோதலுக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்!

மோட்டார் சைக்கிளின் சாரதி மற்றும் அந்த நபர் இருவரும் படுகாயங்களுடன் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.

💔 உயிரிழந்தவர் – 32 வயதுடைய கண்ணதாசன் திவியன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments