சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பரிதாபமான சம்பவம் தற்போது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பகிடிவதை காரணமாக உயிரை மாய்த்துக்கொண்ட மாணவனின் மரணம் தொடர்பில், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!
இந்த 10 மாணவர்களும் இன்று (16) பலாங்கொடை நீதிமன்றத்தில் ஆஜராக, நீதிவான் அவர்களால் மீண்டும் மே 29 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்படுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர், பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் 23 வயதுடைய மாணவன் என்பதும், ஏப்ரல் 29ஆம் தேதி மன உளைச்சலுக்குள் அகப்பட்டு தற்கொலை முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
இந்நிலையில், குற்றப் புலனாய்வுத்துறை தீவிர விசாரணையில் இறங்கியுள்ள நிலையில், இன்னும் பல திருப்பங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📌 இந்த சம்பவம் மற்ற மாணவர்களுக்குத் திட்டவட்டமான எச்சரிக்கையாக அமையுமா?
📌 பகிடிவதையை ஒழிக்கும் வகையில் பல்கலைகழகங்கள் என்ன நடவடிக்கை எடுக்கும்? என மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.