புத்தளம் – சிலாபம் பகுதியை சேர்ந்த விலத்தவ பிரதேசம் இன்று (வெள்ளிக்கிழமை 16) அதிர்ச்சியடைந்தது. காதலாக தொடங்கிய வாழ்க்கை, துப்பாக்கி சத்தத்தில் முடிகின்ற ஒரு சோகக் காட்சி நடந்தேறியுள்ளது!
குடும்பத்தகராற்றால், தன்னுடைய மனைவியை நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டு கணவன் காயப்படுத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதன்பின் அந்த கணவன் தற்கொலை செய்ய முயன்ற நிலையில், பொலிஸார் அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்து, அவசரமாக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவத்துக்கு பின்னாலுள்ள உண்மை காரணங்கள் குறித்து தீவிர விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
📲 மேலும் இது போன்ற பரபரப்பான சூடான செய்திகளை வாசிக்க புதியம்.கொம் இணையத்தை பார்வையிடுங்கள்!