முல்லைத்தீவு – குருந்தூர்மலை பகுதியில் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்த இரு கிராம மக்கள், திடீரென மே 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் மே 15 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட இந்த இருவரும், இன்று (15.05.2025) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது… மேலும் 14 நாட்கள் சிறையில் தொடர வேண்டுமென நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது!
இந்த விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்தது – குருந்தூர்மலை விகாரையின் விகாராதிபதி கல்கமுவ சந்தபொதி தேரர், தொல்பொருள் திணைக்களத்தில் அளித்த புகார் தான்!
👉 “சொந்த மண்ணில் சொந்த நிலத்தில் வேலை பார்த்ததற்கே இந்த நிலைமையா?”
என மக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கேள்விகள் அடுத்தடுத்து எழுந்து வருகின்றன.