கடந்த சில நாளாக ஊரில பெய்யிற பலத்த மழையால, கிளிநொச்சி இரணைமடு குளத்தின்ரை நீர்மட்டம் கூடினதால அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு ஒரு அவசர அறிவித்தலை வெளியிட்டிருக்குது.
குளத்தில இருக்கிற அத்தனை 14 வான்கதவுகளையும் (Shutter) திறந்து விடப் போறாங்களாம்!
விசேஷமா கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சனங்களுக்கு ஒரு பெரிய ரெட் அலர்ட் குடுத்திருக்கினம்!
- ஐயன் கோவிலடி சனம்
- முரசுமோட்டை மக்கள்
- கண்டாவளை வாசிகள்
- உரியன் ஆட்கள்
- பனங்கண்டி தடுவன்கொட்டி சனம்
- கனகராயன் குளம் சனங்கள்
…இவையெல்லாம் இப்ப நிலைமையை கவனத்தில எடுத்து, உசாரா, பாதுகாப்பான இடங்களுக்கு உடனே மாறிப் போங்கோ என்று கண்டிப்பாய்க் கூறியிருக்கினம்.

