Wednesday, June 18, 2025
HomeSri Lankaவெளியே வந்தது பூனைக்குட்டி! யார் இந்த தேவநேசன்?

வெளியே வந்தது பூனைக்குட்டி! யார் இந்த தேவநேசன்?

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை போர்க்களமாய் மாறியுள்ள சூழ்நிலையில் அப்பிரச்சினைகள் யாவற்றிற்கும் காரணகர்த்தாவாய் இருப்பவர் அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தேவநேசன்.

யார் இந்த தேவநேசன்? இவரிற்கு அடி விழும் போதெல்லாம் அந்த மனப்பிறழ்ச்சி பாராளுமன்ற உறுப்பினர் பதைபதைப்பது ஏன்? பொதுநலன் கருதி துணிச்சலாக இயங்கும் வைத்தியர்களை வசை பாடி வயிறு வளர்ப்பவரான அந்த சைக்கோ தேவநேசனிற்காய் மாத்திரம் துடிப்பது ஏன்? இவர்களின் பின்னணி தான் என்ன? ஊரறியா உண்மைகளாய் மறைந்திருந்த இந்த பாவக் கூட்டணி இன்று வெளிச்சத்திற்கு வந்திருப்பது தேவநேசனின் பதவி பறி போகப்போவதின் அச்சத்திலா?

சரி விடயத்திற்கு வருவோம். உண்மையில் யார் தான் இந்த தேவநேசன்?

ஓர் மருத்துவ நிர்வாகியாய் (Medical Administrator) வருவதற்கு எந்தவித பட்ட மேற்படிப்புக்களும் தேவைப்படாத காலப்பகுதியில் மருத்துவ நிர்வாக சேவைக்குள் தற்செயலாக நுழைந்து கொண்டவர். மருத்துவ நிர்வாக சேவைக்கு தற்போது கட்டாயமாகத் தேவைப்படும் பட்ட மேற்படிப்புத் தகுதிகளான MSc in Medical Administration, MD in Medical Administration என எந்த தகுதியும் இல்லாதவர்.

இதனாலேயே சேவை அடிப்படையில் மூத்தவராய் இருந்த போதிலும் சுகாதார உயர் நிர்வாக சேவைப்பதவிகளுக்கு வர முடியாதவர். ஓர் வைத்திய நிபுணரான மனைவிக்கு கீழ்ப்படிந்து வாழப் பழகியவர். மருத்துவ உயர் நிர்வாகப் பதவிகளுக்குரிய அடிப்படை தகுதி எதுவும் இல்லாத போதிலும், மனிதாபிமான அடிப்படையில் தன்னை ஓர் விதிவிலக்காய் பதவி உயர்த்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை இரந்து திரிந்தவர். அவர்கள் மறுத்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அதில் தோல்வியடைந்தவர்.

இவ்வாறு அனைத்திலுமே தோல்வியடைந்து தாழ்வு மனப்பான்மையுள்ள மனிதராய் இருப்பதினால், வெற்றியடைந்த மனிதர்கள் மேல் கடும் வெறுப்பும், பொறாமையும், துவேசமும் உடையவர். மக்கள் மத்தியில் பெயரும் புகழுமுடைய மனிதர்களைக் கண்டாலே வெப்பியாரத்தில் புழுங்கித் துடிப்பவர்.

மற்றவர்களுக்கு தீது செய்வதையே தனது முழுமுதற் கடைமையாய்க் கொண்டவர். “மொட்டைப் பெட்டிசன்” தேவநேசன் என்பதுவே இவரது செல்லப்பெயர். தான் பொறாமை கொள்ளும் எவரையும் எந்தக் கீழ்தர வேலை செய்தாவது அழிக்கும் கொடூரக் குணம் கொண்டவர். இவரால் வேலையிழந்து வாழ்விழந்த நேர்மையான அரசு ஊழியர்கள் ஏராளம்.

ஓர் அரச உயரதிகாரியின் இலட்சணமே வெட்டியாய் கதிரையில் இருப்பதுதான் என்ற உன்னத மந்திரத்தை இன்று வரை சிரத்தையாய் கடைப்பிடிப்பவர். தற்செயலாய் சற்று அதிகம் வேலை செய்பவர்களைக் கூட அதட்டி உருட்டி கதிரையில் சும்மா இருத்தி வைப்பவர். கனவில் கூட யாரிற்கும் சிறிது நன்மையும் சிந்திக்காதவர்.

இவர் கடந்து வந்த மருத்துவ நிர்வாக சேவைப் பாதையே இவரை யாரென அடையாளம் காட்டும். இரண்டாயிரமாம் ஆண்டுகளில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு தகுதியான பணிப்பாளர்கள் யாருமற்ற சூழ்நிலையில் இரு தடைவைகள் பதிற் கடைமைப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இரு தடைவைகளும் அச்சமயம் வைத்தியசாலையில் புகழ் பூத்த வைத்திய நிபுணர்களாய் இருந்த உமாபதி, ரவிராஜ் உள்ளிட்ட அனைவரினதும் சேவைக்கு கடும் இடையூறு ஏற்படுத்திய நிலையில் சுகாதார அமைச்சின் விசாரணைகளைத் தொடர்ந்து போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்பிற்கு விரட்டியடிக்கப்பட்டார்.

நீண்டகால இடைவெளியின் பின் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக தகுதியான எவரும் இல்லாத காலப்பகுதியில் அப்பதவிக்கு பதிற்கடைமைப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் பதிற்கடைமைப் பதவியில் இருந்தவேளை, சுகாதார அமைச்சால் தகுதியான நிரந்தரப் பணிப்பாளர் நியமிக்கப்பட்டார்.

அவர் ஓர் மாற்றுத்திறனாளி மனிதர். அவர் தனது கடைமையைப் பொறுப்பேற்க யாழ் பிராந்திய சுகாதார பணிமனைக்கு வந்தவேளை தேவநேசன் அவரை கடைமையேற்க விடாது தடுத்ததுடன், தனது கதிரையிலிருந்தும் எழும்ப மறுத்துவிட்டார்.

மாற்றுத்திறனாளி என்னும் மனிதாபிமானம் சிறிதுமற்று சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக அவரை நிற்க வைத்தார். இறுதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலையீட்டினைத் தொடர்ந்து பொலீஸ் வரவழைக்கப்பட்டு வலுக்கட்டாயமாக கதிரையிலிருந்து அகற்றப்பட்டார்.

மேலும் ஒரு தரம் கோவிட் பேரிடர் காலப்பகுதியில் இவ்வாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதிற்கடைமை ஆற்றியவேளை கோவிட்டை கண்டு நடுங்கி தனது அலுவலக அறையைப் பூட்டிவிட்டு பதுங்கிக் கொண்டார். பேரிடர் மேலாண்மையைக் கையாண்ட சுகாதார அதிகாரிகள் கூட தனது அறைக் கதவைத் திறந்து உள்நுழையக்கூடாது என கடும் உத்தரவிட்டார்.

தலைவனின்றிய சேனையாய் உரிய பணிப்புரைகளின்றி கோவிட்டை எதிர்கொள்ளவியலாது யாழ் பிராந்தியம் தள்ளாடியது. மீளவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அழுத்தத்தை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட சுகாதார அமைச்சு தேவநேசனை கட்டாய இடமாற்றம் செய்தது.

இவ்வாறு தனது பதவிக் காலத்தில் பல்வேறு குற்ற விசாரணைகளை எதிர்கொண்ட தேவநேசன் நான்கு தடைவைகள் தண்டனை இடமாற்றத்திற்கு உள்ளாகியிருந்தார்.

சரி, இவரிற்கும் அந்த மனப்பிறழ்வு பா.உ இற்கும் என்ன தொடர்பு?

அது ஒரு இரகசிய வலையமைப்பு. தமிழ் மக்களின் இருப்பை, ஏன் ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் இருப்பை சிதைக்கும் ஓர் நீண்டகால நுண்ணரசியல். இவ் வலையமைப்பின் பிதாமகர் அரச கைக்கூலியான முன்னை நாள் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்.

ஓர் மருத்துவ நிர்வாகியாக எந்த தகுதியுமற்ற இவர் முன்னாள் இராணுவ அதிகாரியும் வடமாகாண ஆளுநருமான சந்திரசிறியின் வாலில் தொங்கி அரச, இராணுவ, புலனாய்வு உயர் மட்டங்களின் செல்லப் பிள்ளையாகி பின்கதவால் வைத்திய நிர்வாக சேவைக்குள் அழைத்து வரப்பட்டவர்.

அதற்கு பிரதியுபகாரமாய் கிளிநொச்சியில் கட்டாய கருத்தடை திட்டங்களை வெற்றிகரமாய் அமுல்படுத்தியதன் மூலம் தமிழ்மக்களின் சனத்தொகையை கட்டுப்படுத்தி எஜமானர்களுக்காய் மாடாய் உழைத்தவர்.

கிளிநொச்சியின் சுகாதார ஆளணி ஏனைய மாவட்டங்கள் போன்று அதிகரிக்கப்படாமைக்கும் அங்கு எவ்வித பாரிய சுகாதாரத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமைக்கும் இவரே காரணம். பாரிய புலனாய்வு வலைப்பின்னலின் உதவியுடன் இயங்கும் இவரே தற்போது பெரும் எண்ணிக்கையில் சிங்கள சுகாதார உயரதிகாரிகள் வடக்கில் நியமனம் பெறுவதற்கு காரணம்.

தற்போதைய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பத்திரன, முன்னாள் பணிப்பாளர் திலீப் லியனகே போன்றோர் இவரின் பரிந்துரையின் மூலம் நியமனம் பெற்று ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டவர்கள்/இயக்கப்படுபவர்கள்.

தேவநேசனும் அவ்வலையமைப்பின் முக்கிய நபர். இவர்களின் நோக்கங்கள் குரூரமானவை, தமிழ்மக்களுக்கும், ஏன் முழு இலங்கை மக்களுக்குமே எதிரானவை.

  1. தமிழ்த்தேசிய அரசியலை சிதைத்து தேசிய நீரோட்டத்தின் கீழ் வடக்கை கொண்டு வருவது
  2. மாகாண சபை முறைமை தேவையற்றது, வினைத்திறனற்றது என்பதை நிறுவி அதனை நீர்த்துப் போகச் செய்வது
  3. கொழும்பிலிருந்து வரும் மக்கள் விரோத உத்தரவுகளை எதிர்த்து களமாடவல்ல நேர்மையும், துணிச்சலும், நாட்டுப்பற்றுமுள்ள வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளை விரட்டிவிட்டு கொழும்பின் இசைக்கு தாளம் போடும் முதுகெலும்பற்ற அடிமைகளை வடக்கின் கதிரைகளில் நிரப்புவது
  4. இவை யாவற்றிற்கும் மேலாக, வெளிநாட்டு பல்தேசிய நிறுவனங்களின் நீண்ட நாள் கோரிக்கையான, சுகாதார சேவைகளை தனியார் மயப்படுத்தி பெரும் பணம் ஈட்டுவதன் பொருட்டு இலங்கையின் மிகப்பெரிய சாதனையான அரச இலவச சுகாதார சேவைகளை சீர்குலைத்து நிர்மூலமாக்குவது

இதன் ஒரு முக்கிய கட்டம் தான், எவ்வித அனுபவ அறிவுமற்ற சிறு பாலகனான, சிறுவயது முதலே மனப்பிறழ்வுடைய வைத்தியரை முன்னிறுத்தி சாவகச்சேரியில் இவர்கள் நடத்திய நாடகம். சாதாரண மக்களின் பார்வைக்கு அதுவோர் இயல்பாய் நடந்த பிரச்சினை போன்று கட்டமைக்கப்பட்டாலும் அதுவோர் நன்கு திட்டமிடப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகம்.

அதன் இயக்குநர் ஏலவே குறிப்பிடப்பட்ட முன்னைநாள் கிளிநொச்சி சுகாதாரப் பணிப்பாளரும் அவர்தம் புலனாய்வு வலையமைப்பும். அதில் பிரதான பங்காற்றியவர்களில் தேவநேசனும் ஒருவர்.

இவர்கள், சாவகச்சேரியிலோ அல்லது ஏனைய எந்த வைத்தியசாலையிலோ உண்மையிலேயே மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் எந்தவொரு வைத்தியரையோ அல்லது வைத்திய நிபுணரையோ குறி வைக்கவுமில்லை, அவதூறு செய்யவுமில்லை.

மாறாக, உண்மையான சேவை மனப்பாங்குடன் மக்கள் பணியாற்றிய பல நேர்மையான அதிகாரிகளே குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தேவநேசன், தனக்கு காழ்ப்புணர்வு மற்றும் பொறாமை உள்ள திறமையான நேர்மையான வைத்தியர்கள் குறித்து வழங்கிய பொய்யான பிழையான தகவல்களின் அடிப்படையிலையே சுயபுத்தியற்ற பாலகரான பாஉ தனது நெருங்கிய சிறுவயது நண்பர்களான பலரையும் மிகக்கேவலமாக அவதூறு செய்திருந்தார்/செய்துவருகிறார்.

இன்று தனது குரு தேவநேசனின் கதிரைக்கே ஆபத்து என்றவுடன் தனக்கு சோறு போட்ட முதலாளிக்கு விசுவாசமாய் வாலாட்ட தொடங்கிவிட்டார் பாஉ.

தானாடா விட்டாலும் தசை ஆடுமல்லவா? ஆக, கடைசியில் அந்த பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. வடக்கில் தான் ஆடிய கேவலக் கூத்துக்களின் பின்னணியிலிருந்து நேர்மையான, துணிச்சலான வைத்தியர்களை கேவலப்படுத்தியது/கேவலப்படுத்துவது தேவநேசன் தான் என்பதை தனது பதட்டத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார் பாஉ.

எது எவ்வாறிருப்பினும் இறுதியில் வெல்லப்போவது தர்மமே. மற்றையவரை வருத்தி, ஏய்த்து வாழும் எவரும் சீரும் சிறப்புடன் நெடுநாள் வாழ்ந்ததாய் வரலாறு கிடையாது. தர்மத்தின் வாழ்வு தனை சூது (தேவநேசன்) கவ்வும். தர்மம் ஒருநாள் வென்றே தீரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments