ஒரு கோடி ரூபாய் பணத்தை அரசுக்குச் செலுத்தாமல் தப்பி ஓடிய திலீபன் MP???
கடந்த அரசாங்கத்தின் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் வியத்புர வீடமைப்புத் திட்டத்தில் இருந்து வீடுகளை வாங்கியதால் 22 கோடி ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது
தீயினால் சேதமடைந்த வீடுகளுக்கு அரசாங்கத்திடமிருந்து விசேட நட்டஈடு மற்றும் காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து மேலதிக நட்டஈடுகளை பெற்றுக்கொண்ட போதிலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வீடுகளை கொள்வனவு செய்துள்ளனர்.
தமிழ் MPக்களில் இவர் மட்டுமே இந்த வீட்டினைப் பெற்றுள்ளார்,
திலீபன் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற போது போலி கடவுச்சீட்டுடன் சிக்கி தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணுகின்றார்.
குலசிங்கம் திலீபன் எம்பியின் வீட்டின் சாதாரண பெறுமதி 15.92 மில்லியன் ரூபாய், ஆனால் அவருக்கு சலுகையின் அடிப்படையில் 13.29 மில்லியன் ரூபாய்க்கு வழங்கப்பட்டது. ஆனால் திலீபன் செலுத்திய தொகை 33 இலட்சம் ஆகும். மேலும் செலுத்த வேண்டிய தொகை ஒரு கோடி ரூபாய் ஆகும். இதனை அரசு அறவிடும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இவர்கள் வன்னியின் அபிவிருத்தி நாயகர்களா?
மக்களை வதைத்த திருடர்களா?