வடக்கு ஆளுநராக ஊழல்கள் எதுவும் இல்லாத மதிப்பிற்குரிய வேதநாயகன் ஐயா அவர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே.
ஆளுநர் அலுவலகத்தில் பல கறுப்பு ஆடுகள் இருப்பதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறித்த கறுப்பு ஆடுகள் ஆளுநரின் தீர்மானத்திற்கு முரணாக ஆளுநரை குழப்பி விடுவதாகவும் தங்களது தனிப்பட்ட வேலை திட்டங்களை முன்னெடுத்து செல்ல கௌரவ ஆளுநரை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
ஆளுநரின் தீர்மானங்களை உடனடியாக அமுல்படுத்தாது அவற்றை தாமதிப்பதும் பின் போடுவதும் இந்த ஆடுகளின் வேலையாக உள்ளது இதனால் கௌரவ ஆளுநர் அலுவலகத்தின் மீது மக்களின் அவநம்பிக்கை அதிகரித்து வருகிறது
பொதுமக்களின் முறைப்பாடுகள் ஒழுங்காக கௌரவ ஆளுனர் கவனத்திற்கு கொண்டுவரப்படுவதில்லை
பொதுமக்களின் கடிதங்களுக்கு உரியவாறு பதில் அனுப்பப்படுவதில்லை. குறித்த ஆடுகளே இந்த கடிதங்களை தடுப்பதாக தற்போது தகவல் தெரிவிக்கின்றன
ஆளுநருற்கு செய்யப்படும் இரகசிய முறைப்பாடுகள் அனைத்தும் ஆளுநரின் கவனத்தை கொண்டு வருவதற்கு முன்னர் ‘whatsapp’ செயலி மூலம் உரிய நபர்களுக்கு ரகசியமாக whatsapp செய்யப்படுகிறதாம்
அதிகாரிகளுக்கு எதிரான பல முறைபாடுகள் கௌரவ ஆளுநர்களின் கவனத்திற்கு தெரியாமல் மறைக்கப்படுகின்றன.
இதனால் NPP அரசாங்கத்தினுடைய சேவைகள் பொதுமக்களை சென்றடைவதில் இவர்கள் தடையாக இருப்பதாக ஏனைய திணைக்களத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊழல் பெருச்சாளிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகள் ஆளுநர் அலுவலகத்தில் கிடைத்த உடனே ஊழல் பெருச்சாளிகளின் சாளிகளின் கைகளிலும் கிடைக்கின்றன.
வடக்கில் உள்ள பாரிய ஊழல் பெருச்சாளிகளை கௌரவ ஆளுநர் அவர்கள் வெளியேற்ற முற்பட்டபோது குறித்த கறுப்பு ஆடுகளுடன் புகுந்து தொடர்ச்சியாக அவற்றை தடுக்கின்றன.
கௌரவ ஆளுநர் அவர்களே!
தங்களுடன் விசுவாசமாக நடிக்கும் கறுப்பு ஆடுகளை ஆளுநர் செயலகத்தில் இருந்து வெளியேற்றுவதே. இதற்கு சிறந்த பாடமாக அமையும். இது தொடர்பாக மாண்புமிகு ஜனாதிபதி அலுவலகத்தின் கவனத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

