Friday, December 12, 2025
HomeUncategorizedமுட்டாள் பிசாசு மகிந்த பக்கம் - pathivu

முட்டாள் பிசாசு மகிந்த பக்கம் – pathivu

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் உதித் லொக்குபண்டார நேற்று (28) பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திலிருந்து தப்பித்து ஓடியுள்ளார்

 ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே உதித லொகுபண்டார ஊடகவியலாளர்களை விட்டு விட்டு ஓடியதையும் காண முடிந்தது.

உதித் லொக்குபண்டார, முன்னாள் சபாநாயகர் மு லொக்குபண்டாரவின் இரண்டாவது மகனும், 2009 இல் பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு 2015 வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவருமாவார்.

 2015 தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்க்ஷவின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றினார்.

 அப்போது உதித் லொக்குபண்டாரவை ‘முட்டாள் பிசாசு’ என மகிந்த ராஜபக்க்ஷ ஊடகங்கள் முன் திட்டியதுடன் அது பெரும் ஊடக விளம்பரத்தையும் பெற்றது.

எனினும், மஹிந்த ராஜபக்க்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர், பிரதமரின் பாராளுமன்ற விவகார செயலாளராக உதித் லொக்குபண்டார நியமிக்கப்பட்டார்.

 தானியங்கி வங்கி அட்டையைப் பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான கணக்கிலிருந்து சுமார் 30 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக அப்போது அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments