Wednesday, January 14, 2026
HomeSri Lankaகைவிலங்குடன் நீதிமன்றில் இருந்து தப்பி ஓடிய இரு கைதிகள்!

கைவிலங்குடன் நீதிமன்றில் இருந்து தப்பி ஓடிய இரு கைதிகள்!

பொலன்னறுவை சிறையில் தடுத்து வைக்கப்பட்ட இரு கைதிகள் கடந்த 9ம் திகதி சனிக்கிழமை ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்ட போது நீதிமன்ற வாசலில் கைவிலங்குகளுடன் தப்பிச் ஓடியதாக ஹிங்குரக்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பிச் சென்ற இரு கைதிகளும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிங்குரக்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments