பாடசாலை ஒன்றின் சிற்றூழியராக பணியாற்றும் விளையாட்டு துறை அமைப்பாளராகவும் ஸ்ரீதரனின் இணைப்பாளராகவும் அலன் செயற்பட்டு வருகின்றார். இவரிடம் குறித்த விளையாட்டு பயிற்சிக்காக சென்று சிறுவர்களில் 16 பேரை அவர் பாலியல் ரீதியாக துஸ்பிரயோத்திற்குள்ளாக்கியுள்ளார்.
குறித்த சிறுவர்கள் 10 தொடக்கம் 13 வயதுக்குட்டவர்கள் இவர்களை பயிற்றுவிப்பாளர் மலசல கூடத்திற்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளார். இவர்களைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த சந்தேக நபரான விளையாட்டு பயிற்றுநரை நேற்று 28 ஆம் திகதி நீதி மன்றத்தில் முற்படுத்தியிருந்தனர்.
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் சிறுவர்களுக்கு அடித்த 4 குற்றங்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. ஏனைய 12 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றங்களுக்கு மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

