கெளசல்யாவின் மூத்திரத்தை எடுத்து தருகிறேன் தெளியுங்கள் என கம்பவாரிதிக்கு சொன்ன பைத்தியம் அருச்சுனாவிற்கு வன்மையான கண்டனத்தை பிரசாந்தன் ஶ்ரீவரதராஜன் பதிவு செய்துள்ளார், அந்த பதிவை அப்படியே தருகிறோம்
நேற்று என் நண்பன் அனுப்பிய காணொளியில்,
பாராளுமன்ற உறுப்பினர் திரு. அர்ச்சுனா,
கம்பன் கழக ஸ்தாபகர்
என் ஆசிரியர் கம்பவாரிதி அவர்களைத் தரக்குறைவாக, கொச்சை மொழியில் விமரிசிப்பதைக் காணமுடிந்தது.
உண்மையில் அந்தக் காணொளியில் சில வசனங்களையே கேட்டேன். தொடர முடியாத வக்கிரம்.
சைவ சமயம் சார்ந்த நிந்தனை வேறு.
எந்தவொரு மனிதரையும் எவ்விதமான முரண்பாட்டிலும் எவர்தானும் இவ்வாறு கேவலமாகப் பேசுவதை, எக்காலத்திலும் இச் சமுதாயத்தில் அனுமதிக்கமுடியாது.
என் ஆசிரியரை நான் நன்கறிவேன். தமிழுலகம் நன்கறியும்.
அவர், மொழிப் பற்றுப் போலவே இனப்பற்றும் மிக்கவர். ஆதலால், ‘கம்பன் விழாவை நடாத்துவதோடு மட்டும் நிற்கலாமே…’ எனப் பிறர் பலரும் கூறவும்,
ஈழத் தமிழினத்தை அரசியல் ரீதியாக வழிப்படுத்த வேண்டும் என்று, தன் மனத்துக்குச் சரியென்று பட்டதை, நெஞ்சில் உரத்தோடும் நேர்மைத் திறத்தோடும் துணிந்து, எழுதிவருபவர். பேசி வருபவர்.
அதில், சுயநலம் கிஞ்சித்துங் கிடையாது. பதவி மோகம் கிடையாது. பொருளாதார நலன் கிடையாது.
தன் சொற்பொழிவால் கிடைக்கும் வருமானத்தையே சமுதாயப் பணிகளுக்கு ஆக்குபவர் அவர்.
வலியர் என்று அவர் எவரையும் வழிமொழிய மாட்டார்.
மெலியர் என்று மீக்கூறவும்மாட்டார்.
சாவகச்சேரி வைத்தியசாலைப் பிரச்சினையில் அவர், அர்ச்சுனாவை முதலில் பாராட்டி எழுதியதை, நான் மெய்ப்புப் பார்த்தேன்.
பின், அர்ச்சுனா பல விதமாகவும் தடம் மாறிப்போக, அதை அவர் கண்டிக்கவும் செய்தார்.
கருத்துகளை மறுக்கவும் எதிர்வாதம் செய்யவும் எவருக்கும் உரிமையுண்டு.
பதில் உரைக்கிறேன் என்ற போர்வையில், கீழ்மை மொழிகளில் வசைபாட பொதுவெளியில் அனுமதிக்கமுடியாது.
கருத்தாடும் களம் என்பது கண்ணியமான தளம். அதை ‘கௌரவ’த்துக்குரிய பதவிகளில் இருப்பவர்கள் மதிக்க வேண்டும்.
மாணவனாக அல்ல – ஒரு சமுதாய மனிதனாக – ஆசிரியர் கம்பவாரிதி அவர்களைக் குறித்த திரு. அர்ச்சுனாவின் வசை மொழிகளுக்கு என் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.

