Wednesday, June 18, 2025
HomePolticalவிசர்க் கலாவுடன் சேர்ந்து கொள்ளையடித்த சுரேஸ் உடுவிலில் வீட்டுக்குள் புகுந்தது ஏன்? விசர்க் கலாவின் விசிறிகள்...

விசர்க் கலாவுடன் சேர்ந்து கொள்ளையடித்த சுரேஸ் உடுவிலில் வீட்டுக்குள் புகுந்தது ஏன்? விசர்க் கலாவின் விசிறிகள் கடும் கோபம்!!

பல்வேறு அரச திணைக்கள அதிகாரிகளின் முன்மொழிவுகளுக்கு இணங்க,
மகளிர் விவகார பிரதி அமைச்சராகவும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராகவும் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் விஜயகலா மகேஸ்வரன் இருந்த காலத்தில், வலிகாமம் தெற்கிலுள்ள உடுவில் பிரதேச செயலகத்தினூடாக மேற்கொண்ட நிதி ஒதுக்கீடுகளுக்கும் நடைபெற்ற வேலைகளுக்கும் தானே காரணம் என்று தற்போது தமிழரசுக்கட்சியில் போட்டியிடும் பாலசிங்கம் சுரேஸ்குமார் மோசடியாக உரிமை கோரி , உள்ளூராட்சி தேர்தல் பொய்ப்பிரச்சார துண்டுப் பிரசுரங்களை மக்கள் மத்தியில் வழங்கி வருவது பற்றி யாழ்ப்பாணத்தின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் விஜயகலாவிடம் முறையிட்டுள்ளனர்.

வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் சமூக மட்ட அமைப்புக்களும் வழிபாட்டு ஸ்தலங்களின்
நிர்வாகத்தினரும் நேரடியாகக் கோரிக்கை விடுத்த நிலையில் அரச அதிகாரிகளின் முன்மொழிவுகளைப் பெற்று உடுவில் பிரதேச செயலகத்தினூடாக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்காலத்தில் தன்னூடாகவே நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டதாக காட்டும் தோரணையில் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கும் வேலை ஒப்பந்தகாரர்களுக்கும் படம் காட்டிய சுரேஸ், அவர்களிடம் கட்சி நிதி என்ற போர்வையில்
5% -10 % வரையான கொமிசன் கேட்டுப் பெற்றுக் கொண்டதாகவும் அவ்வாறு சுரேஸினால் வர்த்தகர்களிடமும் ஒப்பந்தகாரர்களிடமும் பெற்றுக்கொண்ட பணத்தில் ஒரு சதம் கூட அவரால் கட்சிக்கு வழங்கப்படவில்லை என்றும் யாழின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் வம்பனுக்கு தெரிவித்தனர்.

அத்துடன் சுரேஸ் உரிமை கோரி வெளியிட்ட பல துண்டுப் பிரசுரங்களையும் வம்பனுக்கு அனுப்பிவைத்துள்ளனர். அத்துடன் இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் சுரேஸ் அக்காலத்தில் அடிக்கடி விஜயகலாவிடம் வந்து கதைப்பார் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். அந்த இளைஞர் யுவதிகளில் சிலருக்கு அரச வேலை வாய்ப்புக்களில் சந்தர்ப்பம் பெற்றுக் கொடுத்ததாகவும் அந்த ஏழைகளிடமும் சுரேஸ்குமார் 5 இலட்சம் தொடக்கம் 15 இலட்சங்கள் ரூபாயை கட்சி நிதி என்று பெற்றுக்கொண்டதான குற்றச் சாட்டுக்கள் மற்றும் முறைப்பாடுகள் பெற்றோரால் விஜயகலாவுக்கு கிடைக்கப்
பெற்றதாகவும் யாழ்ப்பாணத்தின் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் வம்பனுக்கு தெரிவித்தன.

இவ்வாறான மோசடிகளை மேற்கொண்டபோதும் எவ்வித ஒழுக்காற்று விசாரணைகளும் மேற்கொள்ளாமல் தொடர்ந்தும் சுரேஸ்குமார் ஐக்கிய தேசியக் கட்சியில் உறுப்பினராக இருப்பதற்கு ஏன் அனுமதித்தீர்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சிக் காரர்களிடம் விளக்கம் கேட்டபோது , விஜயகலா இம்மோசடிகள் தொடர்பாக சுரேசைக் கண்டித்ததாகவும் எச்சரித்ததாகவும் அவ்வேளையில் சுரேஸ் விஜயகலாவுடன் கடுமையாக முரண்பட்டுக்கொள்வார் என்றும் “ஏலுமெண்டால் எனது நிதிமோசடிகளை உங்களால் நிரூபிக்கமுடியுமா ?” என்று சுரேஸ், விஜயகலாவிடம் சவால் விடுவார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
“நான் ரணில் சேர் மூலம் எல்லாத்தையும் கதைக்கிறன்….” என்றும் சொல்லிக்கொள்ளுவார் என்றும் விஜயகலாவுக்கே சுரேஸ் பெரிய படம் போடத் தொடங்கிவிடுவார்….” என்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் தெரிவித்தனர்.

சுரேஸ்குமார் இன்னமும் ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சி அங்கத்துவத்தை துறக்கவில்லை என்றும் இப்பொழுதும் ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவராக இருக்கும் சுரேஸ், தமிழரசுக்கட்சியில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின்
ஜே/200 கிராமசேவகர் பிரிவும் ஜே/199 கிராமசேவகர் பிரிவும் உள்ளடங்கும் 9ம் வட்டாரத்தில் போட்டியிடுகிறார் என்றும் அறிய வருகிறது.

இது எப்படி முடியும் என்று தமிழரசுக் கட்சியின் உள்ளூர் உறுப்பினர் ஒருவரிடம் வம்பன் விசாரித்தான்.
“அவையெல்லாம் மேல்மட்டங்களின் முடிவுகள்…..” என்றார் அந்த உள்ளூர் உறுப்பினர்.

ஆயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் விஜயகலா அவர்கள் பாலசிங்கம் சுரேஸ்குமாருக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் என்றும் விரைவில் செய்தியாளர் சந்திப்பொன்றில் சுரேசின் அரசியல் மோசடிகளையும் நிதிமோசடிக் குற்றச்சாட்டுக்களையும் மக்களுக்கு விளக்கவுள்ளார் எனவும் யாழ். ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments