போதைப்பொருள் வியாபாரி வீட்டில் தங்கிய மூன்று பொலிஸார் கைது

Date:

போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படும் வீடொன்றில் தங்கியிருந்த மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இன்று (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிப்பன்னை பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிப்பன்னை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வெலிப்பன்னை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்துகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூவரும் ஐஸ் போதைப்பொருளைப் பாவனை செய்வதற்காகக் குறித்த வீட்டில் தங்கியிருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் மூவரும் வைத்திய பரிசோதனையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிப்பன்னை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

முகநூலில் தேசியம் பேசும் ‘முகமூடி’ சாமி: பிரான்ஸ் மோசடி மன்னன் சுகிர் முல்லையின் பகீர் பின்னணி!

பேஸ்புக், ரிக்ரொக்கை திறந்தாலே போதும்... கையை ஆட்டி, ஆக்ரோஷமாகப் பேசி, தன்னை...

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்: மகளின் “காதல்” மயக்கம்… விரிவுரையாளரான தாயின் உயிரைப் பறித்த விபரீதம்!

மகளின் காதலனால் கடத்திச் செல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவபீட விரிவுரையாளர்...

சொகுசு கார்” மயக்கமும்… சோலி முடிஞ்சப்புறம் வார அழுகையும்! யாரைச் சொல்லிக் குத்தம்?

யாழ்ப்பாணம் கார்கில்ஸ் திரையரங்கிலை வேலை பார்க்கிற ஒரு புள்ளி சொகுசு கார்...

டக்ளஸ் தலைமையில் பேரெழுச்சி கொண்டது பெண்கள் படையணி

ஒரு காலத்திலை EPDP முகாம் எண்டால் சும்மாவா? யாழ்ப்பாணமே அங்கைதான் நிக்கும்....