HomePolticalஈபிடிபியின் 32வருட கோட்டை வீழ்ந்தது

ஈபிடிபியின் 32வருட கோட்டை வீழ்ந்தது

ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளர் தெரிவு, இன்று காலை பரபரப்பான திருப்பங்களுடன் முடிவடைந்தது. 13 உறுப்பினர்களைக் கொண்ட சபையில், பலம் பெற்று வந்த ஈபிடிபியின் 32 வருட ஆட்சி, ஒரு சிறிய “டொஸ்” மூலம் தூள் ஆனது!

EPDP – 4
காங்கிரஸ் – 4
NPP – 3
தமிழரசு – 2

தலைமை யாரிடம் சேரும்? என்று கோணல் போட்ட அரசியல் சூத்திரத்தில், தமிழரசின் இரு உறுப்பினர்களுக்கும் EPDP-யை ஆதரிக்க வேண்டும் என அழுத்தமும் மிரட்டலும் விடுக்கப்பட்டு இருந்தது.

ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினராக தமிழரசு கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரான முன்னாள் விடுதலைப்புலிகள் தளபதி ரஞ்சித் நேரடியாகவே சிலவற்றை கூறினார்.

“EPDP எனும் இனத்துரோகிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய நான், இன்று அவர்களுடன் கூட்டணி வைக்க முடியாது. நீக்கவேண்டுமென்றால் கட்சியிலிருந்து நீக்குங்கள்” என தூள் கிழப்பினார்.

⚔️ யார் யார் போட்டியில்?
EPDP யுகனை தவிசாளராக முன்மொழிந்தது

காங்கிரஸ் அன்னராசாவை முன்மொழிந்தது

வாக்கெடுப்பு – 5 : 5 (யுகன் vs அன்னராசா)

முடிவாக… “டொஸ்”!

அப்படியே சைக்கிள் கூட்டணி அன்னராசா தவிசாளராக தெரிவானார்.

கட்சி முடிவிற்கு எதிராக தமிழ் தேசியத்தின் இருப்பிற்காக ஆதரவளித்த தமிழரசின் ரஞ்சித்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் உபதவிசாளராக தெரிவுசெய்தனர்.

1993இல் இருந்து ஈபிடிபி வசம் இருந்த ஊர்காவற்துறை பிரதேச சபை இன்று தமிழ் தேசிய பேரவையின் கைகளுக்கு வந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments