HomeSri Lanka💉 யாழில் ஹெரோயின் அதிர்ச்சி!

💉 யாழில் ஹெரோயின் அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி – மட்டுவில் பகுதி இன்று காலை வரையிலும் ஒரு அதிர்ச்சியுடன் பேசப்படுகின்றது.

27 வயதான இளம் குடும்பஸ்தர் பாலசிங்கம் ரொபின்சன், தாயாரின் வீட்டு பின்புறம் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம், சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பிள்ளையின் அன்பான தந்தையாக இருந்த இவர், நேற்றிரவு வீடு திரும்பாததை அடுத்து உறவினர்கள் தேட ஆரம்பித்தனர். ஆனால் அவரது சொந்த தாயின் வீட்டு பின்னால் சடலமாக மீட்கப்பட்டார்.

உடற்கூற்று பரிசோதனையிலே, ஊசி மூலம் ஹெரோயின் செலுத்தியதாலேயே மரணம் ஏற்பட்டது என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments