Sunday, December 7, 2025
HomeSri Lankaயாழில் 30 வயதான குடும்ப் பெண் விஜிதா தீ மூட்டி மரணம்!

யாழில் 30 வயதான குடும்ப் பெண் விஜிதா தீ மூட்டி மரணம்!

யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து தனக்குத் தானே தீ வைத்து உயிர் மாய்த்துள்ளார். இணுவில் கிழக்கு, கொக்கன் வளவுப் பகுதியைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா (வயது 30) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்றைய தினம் குளிப்பதற்கு என்று சென்றுள்ளார். பின்னர் அங்கு தனக்குத் தானே தீ மூட்டி உயிர்மாய்த்துள்ளார். மன விரக்தி காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments