HomeSri Lankaபிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் விபரங்கள் இதோ!!

பிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் விபரங்கள் இதோ!!

மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கொலைகள் மற்றும் சொத்துக்குவிப்பு ஆகியவற்றை ஆராய்ந்து விசாரிக்க உடனடியாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்கும் வண்ணம் வலியுறுத்தியுள்ளனர்.
அறிக்கையில் பின்வரும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சொத்துக்கள்:-
இலங்கையில் உள்ள சொத்துக்கள்.
01. வீடு – 01, மட்டக்களப்பு பூம்புகார் என்ற இடத்தில் இந்த வீடு அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 2 கோடி.
02. வீடு – 02, கொழும்பு இராஜகிரிய என்னும் இடத்தில் றோயல் அப்பார்ட்மென்டில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 6.5 கோடி.
03. வீடு – 03, கொழும்பு கறுவாத்தோட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 23 கோடி.
04. வீடு – 04, மட்டக்களப்பு வாவிக்கரை வீதி – 01 என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 12 கோடி.
05. சுற்றுலாவிடுதி – 01, திருகோணமலை உப்புவெளி என்ற இடத்தில் இந்த சுற்றுலாவிடுதி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 5 கோடி.
06. சுற்றுலாவிடுதி – 02, நுவரெலியா, நுவரெலியா நகர் என்ற இடத்தில் இந்த சுற்றுலாவிடுதி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 17 கோடி.
07. 12 ஏக்கர் நிலம், மட்டக்களப்பு பாசிக்குடா என்ற இடத்தில் இந்த 12ஏக்கர் நிலம் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 25 கோடி.
08. 50 ஏக்கர் நிலம், திருகோணமலை, கும்புறுப்பிட்டி என்ற இடத்தில் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 20 கோடி.
09. நிலத்தொகுதி, மட்டக்களப்பு திராய்மடு என்னும் இடத்தில் இந்த நிலத்தொகுதி காணப்படுகிறது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை.
10. 115ஏக்கர் வயற்காணி, மட்டக்களப்பு புளுட்டுமானோடை என்ற இடத்தில் இந்த வயற்காணி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை.
11. 10ஏக்கர் நிலம், மட்டக்களப்பு மாங்கேணி என்ற இடத்தில் இந்த நிலம் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை.
12. ஆழ்கடல் மீன்பிடி இழுவைப்படகுகள் 12, கொழும்பு டிக்கோவிட்ட என்னும் இடத்தில் இந்த இழுவைப்படகுகள் காணப்படுகின்றன. இதன் பெறுமதி: 20 கோடி.
வெளிநாட்டு சொத்துக்கள்:-
14. சிங்கப்பூர் Orchard Road இல் அமைந்துள்ள Alfred Tower என்ற இடத்தில் இருக்கும் தொடர்மாடி குடியிருப்பில் வீடு – 01. இதன் பெறுமதி: 7.5 கோடி.
15. நகைக்கடையும் கட்டடமும், சுவிட்சர்லாந்து சூரிச் என்ற இடத்தில் இந்த நகைக்கடையும் கட்டடமும் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 150 கோடி.
16. வெளிநாட்டு வங்கிகளிலுள்ள மொத்த பணத்தொகை 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள்..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments