Sunday, December 7, 2025
HomeSri Lankaயாழ் பல்கலை பேரவைக்குப் புதிய உறுப்பினர்கள்!

யாழ் பல்கலை பேரவைக்குப் புதிய உறுப்பினர்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

05.02.2025 முதல் அடுத்து வரும் மூன்றாண்டுகளுக்குச் செயற்படும் வகையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளவர்களின் விவரம் வருமாறு:
பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ் (ஓய்வு பெற்ற சமூகவியல் பேராசிரியர்), இ.பத்மநாதன் (முன்னாள் பிரதம செயலாளர் – நிதி), ஏந்திரி திருமதி எஸ்.வினோதினி (பிரதம பொறியியலாளர், கட்டடங்கள் திணைக்களம்), ஏந்திரி. ஏ.சுபாகரன் (திட்டப்பணிப்பாளர், ஏசியா பவுண்டேசன்), வைத்திய நிபுணர் என். சரவணபவ மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் நிபுணர்), செல்வி ஷெரீன் அபதுல் சரூர் ( எழுத்தாளரும், பெண் உரிமைச் செயற்பாட்டாளரும்), கலாநிதி எம். அல்பிரட் (முன்னாள் பீடாதிபதி, பேராதனைப் பல்கலைக்கழகம்), ஏந்திரி அ. குணாளதாஸ் (பட்டயப் பொறியியலாளர்), என். செல்வகுமாரன் (முன்னாள் பீடாதிபதி, சட்டபீடம், கொழும்பு), திருமதி வனஜா செல்வரட்ணம் (பணிப்பாளர், வட மாகாண தொழிற்றுறை திணைக்களம்), டி. கே.பி.யூ. குணதிலக (முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர், இலங்கை மின்சார சபை), எம். ஜே. ஆர். புவிராஜ் ( முன்னாள் பணிப்பாளர், திறைசேரி), பேராசிரியர் சி.சிவயோகநாதன் ( வாழ்நாள் பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம்), பி. ஏ. சரத்சந்திர ( முன்னாள் அரச அதிபர், வவுனியா), க. பிரபாகரன் (சட்டத்தரணி), ஏ.எம்.பி.என். அபேசிங்க (மாகாணப் பணிப்பாளர், விவசாயத் திணைக்களம், வடமத்திய மாகாணம்.)
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய ஒவ்வொரு பல்கலைக்கழகத்தினதும் உள்வாரிப் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட ஒரு உறுப்பினர் அதிகமான எண்ணிக்கைக்கு வெளிவாரி உறுப்பினர்கள் பேரவைக்கு நியமிக்கப்படுவது வழமையாகும்.

பல்கலைக்கழகப் பேரவை ஒன்றின் வெளிவாரி உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் ஒருவர் ஒரு பட்டதாரியாக இருத்தல் வேண்டும் அல்லது முகாமைத்துவத்தில் மீயுயர் தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும் என்ற அடிப்படைத் தகுதியுடன், பால்நிலை சமத்துவம், சமய ரீதியான பிரதிநிதித்துவத்துடன், சமூக நலன் சார்ந்த உயர் சிந்தனையுடைய நபர்களையே வெளிவாரி உறுப்பினர்களாக நியமிக்கலாம் என்ற வரையறை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வரையறுக்கப்பட்டிருக்கின்ற போதிலும், ஆட்சியதிகாரத்திலுள்ள கட்சிகளின் சிபார்சின் அடிப்படையிலேயே இதுவரை காலமும் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்று வந்துள்ளமையும், யாழ்பாணத்தில் மிக நீண்டகாலமாக அமைச்சர் ஒருவரின் செல்வாக்கில் நியமனங்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments