HomeSri Lankaநிறுத்தப்பட்ட யாழ் தேவியை மீள தொடங்குவேன் - நாமல்!

நிறுத்தப்பட்ட யாழ் தேவியை மீள தொடங்குவேன் – நாமல்!

தற்போதைய நிர்வாகத்தின் செயல்திறனற்ற தன்மையால் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் தேவி புகையிரத பாதைகளின் சேவைகளை மீண்டும் தொடங்கி வைப்பதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

30 வருட கால யுத்தத்தை முடித்ததுடன் வடக்கு மாகாணத்திற்கான யாழ்.தேவி ரயில் பாதைகளை ராஜபக்ச அரசாங்கம் வெற்றிகரமாக உருவாக்கித் தந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

30 வருடகால யுத்தத்தை முடித்துக் கொண்டு எமது அரசாங்கம் வடமாகாணத்திற்கான யாழ் தேவி புகையிரத பாதைகளை வெற்றிகரமாக நிறுவியது.எனினும் தற்போதைய நிர்வாகத்தின் செயற்திறன் இன்மையினால் அந்த சேவைகள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் இந்திய நிதி உதவியின் கீழ் வவுனியா முதல் அனுராதபுரம் வரையான புகையிரத போக்குவரத்து பாதை திருத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments