ஆபத்தான கார் சாரதி வவுனியாவில் மடக்கிப்பிடிப்பு

Date:

வவுனியா நகரில் ஆபத்தான வகையில் காரைச் செலுத்தி தொடர்ச்சியான விபத்துக்களை ஏற்படுத்திய சாரதி இளைஞர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று புதன்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இருந்து காரை செலுத்தி வந்த இளைஞர் ஒருவர் உக்கிளாங்குளம் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.

இதன் போது வைரவபுளியங்குளம் மற்றும் நகரப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஏனைய வாகனங்களுடனும் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து குறித்த காரை இளைஞர்கள் சிலர் விரட்டிச் சென்றுள்ளனர். அதிவேகமாக பயணித்த கார் பூந்தோட்டம், பெரியார்குளம் பகுதியில் வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் காரின் சாரதியை மடக்கிப் பிடித்த இளைஞர்கள், அவரை நையப்புடைத்ததுடன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

முகநூலில் தேசியம் பேசும் ‘முகமூடி’ சாமி: பிரான்ஸ் மோசடி மன்னன் சுகிர் முல்லையின் பகீர் பின்னணி!

பேஸ்புக், ரிக்ரொக்கை திறந்தாலே போதும்... கையை ஆட்டி, ஆக்ரோஷமாகப் பேசி, தன்னை...

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்: மகளின் “காதல்” மயக்கம்… விரிவுரையாளரான தாயின் உயிரைப் பறித்த விபரீதம்!

மகளின் காதலனால் கடத்திச் செல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவபீட விரிவுரையாளர்...

சொகுசு கார்” மயக்கமும்… சோலி முடிஞ்சப்புறம் வார அழுகையும்! யாரைச் சொல்லிக் குத்தம்?

யாழ்ப்பாணம் கார்கில்ஸ் திரையரங்கிலை வேலை பார்க்கிற ஒரு புள்ளி சொகுசு கார்...

டக்ளஸ் தலைமையில் பேரெழுச்சி கொண்டது பெண்கள் படையணி

ஒரு காலத்திலை EPDP முகாம் எண்டால் சும்மாவா? யாழ்ப்பாணமே அங்கைதான் நிக்கும்....