யாழ்ப்பாணப் பக்கத்தில இப்போ ஒரு பரபரப்பான கிசுகிசுதான் பேசப்பட்டுக்கிட்டு இருக்கு. அங்க உள்ள ஒரு பிரபல பாடசாலையில, ஆசிரியர் ஒருவர் செய்த செயல் ஒண்டு இப்போ பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கு.
விஷயம் இதுதான்: தரம் 11-ல் படிக்கிற ஒரு மாணவன், சில நாளா பாடசாலைக்கு வரவில்லையாம். இதைக் கண்ட அந்த ஆசிரியர் கடுங்கோபமடைந்து, மாணவனைப் பார்த்துக் க.பொ.த. சாதாரணப் பரீட்சைக்கு அனுமதிக்க முடியாது என்று பயமுறுத்தியிருக்கிறார்.
இது ஒருபக்கம் இருக்க, அடுத்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்திருக்கு. கோபத்தின் உச்சிக்குப் போன அந்த ஆசிரியர், அந்த மாணவனை முழங்காலில் இருக்க வைத்துவிட்டு, முகத்திலும் தலையிலும் தாறுமாறாகத் தாக்கியிருக்கிறார்!
அடடா… அந்த அடி தாங்க முடியாமல், காயங்களுடன் அந்த மாணவன் இப்போ யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.
மாணவன் பாடசாலைக்கு வராததுக்கு என்ன காரணம்? அதை விசாரித்துத் தீர்க்காமல், இப்படியொரு கொடூரமான தாக்குதலை ஆசிரியர் ஏன் நடத்தினார்? என்று இப்போ கல்விச் சமூகம் முழுக்கக் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கு.

