யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி ஒரு இளைஞர் உயிரிழந்த சோக சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
அநுராதபுரம் மாவட்டம் மெதகம பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் பின்புற ரயில் கடவை அருகே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. ரயிலின் வேகத்தில் நேருக்கு நேர் மோதி, அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
22 வயதுடைய இளைஞர் ஒருவர் – மெதகம, பரசன்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஏன் அந்த நேரத்தில் அந்த இடத்தில் அவர் இருந்தார்? இது விபத்தா, இல்லை வேறேனும் பின்னணி இருக்கிறதா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.