Thursday, July 3, 2025
HomePolticalபங்களாதேஷ் நிலையே எமக்கும் ஏற்படும் : அகிலவிராஜ் எச்சரிக்கை

பங்களாதேஷ் நிலையே எமக்கும் ஏற்படும் : அகிலவிராஜ் எச்சரிக்கை

கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்தால் நாடு நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என நாங்கள் அன்று மக்களுக்கு தெளிவுபடுத்தினோம். என்றாலும் மக்கள் எங்களை நம்பாததால் பாரிய நெருக்கடிக்கு எங்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டது.

அதேபோன்று தற்போதும் ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாருக்கு வாக்களித்தாலும் மீண்டும் சில மாதங்களில் நாட்டை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்கவுக்கே முன்வரவேண்டி வரும். அதனால் மக்கள் பிழையான தீர்மானம் எடுத்தால் பங்களாதேஷுக்கு ஏற்பட்டுள்ள நிலையே எமக்கும் ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இடம்பெற இருக்கும் நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பு முடியுமான தலைவரை தெரிவு செய்வதா அல்லது புதிய ஒருவரை தெரிவுசெய்து பரீட்சித்துப்பார்ப்பதா என்பது மக்களின் தீர்மானத்திலேயே இருக்கிறது. ஏற்கனவே கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு வாக்களிக்கும்போது, நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் என நாங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தினோம்.

ஆனால் மக்கள் அன்று எங்களை நம்பவில்லை. அதேபோன்றே எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாருக்கு வாக்களித்தாலும் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும். அதில் எந்த சநதேகமும் இல்லை.

அதனால் மக்கள் இந்த தேர்தலை விளையாட்டாக கருதாமல் சரியான தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருந்த பங்களாதேஷுக்கு ஏற்பட்டுள்ள நிலையே எமது நாட்டுக்கும் ஏற்படும். இன்று மாலைத் தீவிலும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நாடுகளின் சரியான தலைமைத்துவம் இல்லாமையே இதற்கு காரணமாகும். பங்களாதேஷ், மாலைத்தீவு நாடுகள் ரணில் விக்ரமசிங்க போன்ற ஒரு தலைவரையே தேடிக்கொண்டிருக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொங்கு பாலத்தில் பயணித்து வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை ஓரளவு கட்டியெழுப்பி இருக்கிறது. அதனால் எஞ்சியுள்ள தூரத்தையும் அவரால் கடந்துசெயல்ல முடியும். புதிய தலைவர் ஒருவர் தேவையில்லை. பொருளாதார பிரச்சினைக்கு ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரே தீர்வுகாண முடியும்.

அதனை அவர் செயலில் காட்டி இருக்கிறார். ரணில் விக்ரமசிங்க பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகண்டு வருவதை மக்கள் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த கஷ்டமான நிலை தற்போது இல்லை. என்றாலும் மக்கள் இன்னும் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமத்துடனவே வாழ்ந்து வருகின்றனர்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் ஒரு தவணை அதிகாரம் கிடைத்தால் பொருளாதார பிரச்சினைக்கு முழுமையான தீர்வை பெற்றுத்தருவார்.

மக்கள் ஊடக களியாட்டங்களுக்கும் பொய் வாக்குறுதிகளுக்கும் நம்பி பிழையா தீர்மானம் எடுத்தால், அதன் பிரதிபலனை மக்களுக்கே அனுபவிக்க நேரிடும். தற்போது நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வரும்போது இதனைவிட மக்கள் எதை எதிர்பார்க்கின்றனர்? அதனால் மக்கள் சிந்தித்து தீர்மானிக்க வேண்டும் என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments