கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்.
ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘ரணிலுடன் இணைந்து நாட்டை வெற்றிகொண்ட ஐந்தாண்டுகள்’ என்ற தலைப்பில் ஐந்து முக்கிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், எரிவாயு உருளைச் சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராக ஜனாதிபதி போட்டியிடுவார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, அலி சப்ரி, மனுஷ நாணயக்கார, நிமல் சிறிபால டி சில்வா உட்பட பல மதத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் முன்னிலையில் ஜனாதிபதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்.