யாழில் பிரபல விடுதியில் நேற்ற முன்தினம் காலை 10 மணியளவில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விடுதிக்குள் அத்துமீறி நுளைந்த 3 பேர் கொண்ட ஆண்கள் குழு ஒன்று அந்த விடுதி அறை ஒன்றை உடைத்து உள்ளே நுழைத்து அங்கிருந்த பெண் மற்றும் ஆண் ஒருவரையும் நையப்புடைத்துள்ளது. குறித்த குழுவில் இருந்த ஆண் ஒருவரின் மனைவியான 36 வயதான பாடசாலை ஆசிரியை ஒருவரும் வைத்தியர் ஒருவருமே நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் விடுதி நிர்வாகம் முறைப்பாடு செய்யவில்லை எனத் தெரியவருகின்றது. தலையில் காயமடைந்த வைத்தியர் விடுதி நிர்வாகத்தால் உடனடியாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியருடன் தங்கியிருந்த பெண்ணை தாக்கியவர்கள் தரதரவென இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றதாகத் தெரியவருகின்றது.
குறித்த வைத்தியரும் குறித்த ஆசிரியையும் பாடசாலை நேரத்தில் அடிக்கடி குறித்த விடுதியில் வந்து தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என விடுதி ஊழியர்கள் தரப்பால் தெரிவிக்கப்படுகின்றது.