சாவகச்சேரி வைத்தியசாலை ஊழல் என்ற பெயரில் நாடகம் ஒன்றை ஆரம்பித்து சாவகச்சேரி மக்களை ஏமாற்றி தன்னுடைய பாடசாலை நண்பர்களையும் கூட்டு சேர்த்து பின்பு அவர்களையும் ஏமாற்றி ஒருவர், எக்கில தப்பில்ல பாராளுமன்ற உறுப்பினர் ஆனது எல்லோரும் அறிந்ததே….
இவற்றின் பின்னால் இருந்த சதியைப் பார்ப்போமேயானால்…. திரை மறைவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இரு பிரதான தனியார் வைத்தியசாலைகள் செயற்பட்டுள்ளன.அவ் வைத்தியசாலைகளின் நிர்வாகிகள் / அவர்கள் சார்பாக சிலர் அர்ச்சனாவுடன் தொடர்பு கொண்டு தங்கள் வைத்தியசாலைகளில் வேலை செய்யும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், ஊழியர்கள் அர்ச்சுனாவின் அரசியல் பிரவேசத்தை வரவேற்பதாகவும், ஆனால் சில வைத்திய நிபுணர்களும் வைத்தியர்களும் ( அரச வைத்தியசாலையில் சேவையாற்றும் ) மாத்திரமே எதிர்ப்பதாக நம்ப வைத்ததன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்து வந்துள்ளனர்…. .
அதாவது வாயில வந்தத கதைக்கும் வைத்தியரிடமிருந்து இருந்து தமது வைத்தியசாலைகளையும் ,தமது பங்குதார நிபுணர்களையும் பாதுகாப்பது, மற்றும் இலவச மருத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லாமையை மக்களுக்கு உருவாக்கி தமது வைத்தியசாலை வருமானத்தை பெருக்கிக் கொள்வது. இதற்காக பெருமளவு பணத்தை சில தனியார் சமூக ஊடகங்களுக்கு தேர்தல் பிரச்சார காலங்களின் போது செலவழித்திருந்தனர். தற்போது அகப்பட்டும் உள்ளனர்..
அண்மையில் வழக்கம்போலவே பைத்திய வைத்தியரால் புற்றுநோய் வைத்திய நிபுணர் ஒருவரை பற்றி விமர்சிக்கப்பட்டது. அவருடைய இலவச சேவைகளை யாழ்ப்பாணத்தில் இல்லாதொழிப்பதன் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை தனியார் வைத்தியசாலைக்கு வர வைப்பதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும். புற்றுநோய் வைத்திய நிபுணருக்கு ஆதரவாக பெருமளவான வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், பொதுமக்கள் தமது நிலைப்பாட்டை எடுக்கின்ற போதும் , ஒரு சில நிபுணர்கள் (தனியார் வைத்தியசாலைகளில் இரவு பகலாக வேலை செய்யும் ) மௌனமாக இருப்பதோடு, தமது அல்லகைகள் மூலமாக புற்றுநோய் நிபுணருக்கு எதிராக சில கருத்துக்களை வெளியிடுகின்றனர் .
குறிப்பாக அண்மையில் வைத்திய நிபுணர் ஒருவரால் நடாத்தப்படும் தனியார் வைத்தியசாலைக்கு , யாழ் போதனா வைத்தியசாலையில் இரு நிபுணர்கள் கடமையில் இருக்கின்ற போதிலும் ,நடைபெறும் இழைய ஆய்வு (Biopsy) கணிசமான அளவு சில வைத்தியர்களால் அனுப்பப்படுகின்றது என்பது சுட்டிக்காட்டப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள சில பிரபல வைத்திய நிபுணர்கள் இன்னும் ஒரு தனியார் வைத்தியசாலையின் பிரதான பங்குதாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பைத்தியர் இந்த தனியார் வைத்திய மாபியாவை பற்றி வாயே திறக்கவில்லை காரணம்?…..
தெற்கில் நரம்பியல் நிபுணரின் ஊழலை வாய்கிழிய கத்தும் பைத்தியம். ஏன்.. யாழ்ப்பாணத்தில் ஒரு நரம்பியல் நிபுணர் ,கடந்த 10 வருடமாக தனது தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு (நரம்பியல் சம்பந்தமில்லாத பல நோயாளிகளையும்) முழுப்பணமும் நோயாளர்களிடமிருந்து உருவப்பட்ட பின் நோயாளர்களிடம் பணம் இல்லை என்ற நிலை வந்தபின் யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள அவருடைய விடுதிக்கு மாற்றப்படுவது தொடர்பாக வாயை திறப்பதில்லை?
கடந்த வருடம் யாழ்ப்பாணம் விடுதி இலக்கம் இரண்டில் கடமையாற்றும் பெண் வைத்திய நிபுணர் நோயாளி ஒருவரை பிரபல தனியார் தனியார் வைத்தியசாலைக்கு மாற்றினால் ஓரிரு நாட்களில் நோய் குணமடையும் என்று கூறி அங்கு மாற்றி உள்ளார். அங்கு மூன்று நாட்களாகியும் நோயாளியின் நிலைமை மோசமடைந்ததோடு நோயாளியின் உறவினர்கள பல லட்சங்கள் செலவழித்தும் நோய் குணமடையாததால் மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலைக்கே போராடி மாற்றியுள்ளனர்…
இப்படி பல பல சம்பவங்கள் உள்ளன….. . இனிவரும் காலங்களில் மக்கள்தான் விழிப்புடன் இருந்து நல்ல வைத்திய நிபுணர்களையும், வைத்தியர்களையும் பைத்தியத்திடமிருந்தும் ,தனியார் மருத்துவ மாபியாவிடம் இருந்தும் பாதுகாத்து சிறந்த இலவச வைத்தியம் அரச வைத்தியசாலைகளில் கிடைக்க வழி செய்ய வேண்டும்….

