அரசியலில் புதிய அதிர்வலை! யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியே கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது. அவரின் எம்.பி பதவியை வலுவற்றதாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து முக்கிய தீர்மானம் ஜூன் 26 அன்று வெளியாகவிருக்கிறது!
இன்று (14) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசர்கள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவ தலைமையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போது, மனுவின் விவரங்களை உறுதி செய்ய விசாரணையை ஜூன் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த பரபரப்பான மனுவை தாக்கல் செய்தவர் – சமூக செயற்பாட்டாளர் ஓஷலா ஹெராத். இவர் ஏற்கனவே பல அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளைப் பற்றி விமர்சனங்களை எழுப்பியவர் என்றும் கூறப்படுகிறது.
👉 அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படுமா என்பது தொடர்பில் வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தீர்ப்புக்கு ஜூன் 26வரை காத்திருங்கள்.