வடமாகாண கல்வி அமைச்சினால் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிதி நிர்வாக முறைகேடுகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய விசாரணை குழு ஆரம்ப புலனாய்வு விசாரணையில் தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளிற்கு அமைவாக குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சனுக்கு ஆரம்ப புலனாய்வு விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.
இதனையடுத்து வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளிற்கு அமைவாக இக்குற்றங்களைப் புரிந்த அதிபரை உடனடியாக வலயத்துடன் இணைத்து ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.

