கூட்டமைப்பினர் மக்களை ஏமாற்றுவதற்காகவே; அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். மக்கள் அவ்வாறானவர்களது பசப்பு வார்த்தைகளை கண்டு ஏமாற கூடாது. ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் தீர்மானிக்கும் என்று சாணக்கியன் வருகின்றார். இவர்கள் இந்தியாவின் முகவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியுமென கூறியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்.
இதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக பெரியளவிலான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிதி, மற்றும் பல்வேறு அபிவிருத்தி நிதிகள் ஜனாதிபதி செயலாகத்தால் இவ்வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.
அதற்கு உதவியாக அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் அபிவிருத்திக்காக முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்தன.
அக்கோரிக்கைகளின் அடிப்படையில் வெவ்வேறு தொகைகள் ஜனாதிபதி செயலாகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அப்பணங்கள் அபிவிருத்தி பணிகளுக்காக நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்படுகின்றதே தவிர எந்த நாடாளுமன்ற உறுப்பிருக்கும் நேரடியாக கொடுக்கப்படவில்லை என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.