Thursday, July 3, 2025
HomeUncategorizedஉடனடியாக மாகாணசபை தேர்தல்:சஜித்!

உடனடியாக மாகாணசபை தேர்தல்:சஜித்!

அனைத்து இனம் மற்றும் மதத் தலைவர்கள், மக்களின் ஆசிர்வாதத்துடன், புதிய அரசியலமைப்பொன்று இலங்கையில் கொண்டுவரப்படும் வரை 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து ஆறுமாதகாலப் பகுதிக்குள் மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்படும் எனவும் இன்று தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட சஜித் பிரேமதாச, தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பில் ஏனைய இரண்டு பிரதான வேட்பாளர்களாக உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் குறிப்பிடத்தக்க எதனையும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கவில்லை.

ஆனால், சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசிலமைப்பின் ஒருபகுதியாக உள்ள 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

மதத் தலைவர்கள், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து முறையாக கருத்துக்களைப் பெற்று தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்க ஐக்கிய மக்கள் சத்தி, ஐக்கிய மக்கள் கூட்டணி அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments