காரைநகர் பிரதேசசபை தவிசாளராக சுயேச்சைக்குழு உறுப்பினர் கிருஸ்ணன் கோவிந்தராசன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று (19) காலையில் நடந்த தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய பேரவை, சுயேசசைக்குழு அணிகளுடன் இணைந்து மணிவண்ணன் குழுவினரும் ஆதரவளித்தனர்.
3 தரப்பும் தலா 16 மாதங்கள் வீதம் சபை தவிசாளர் பதவியை பங்கிடும்.
சுயேச்சைக்குழு, மணிவண்ணன் தரப்பு மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சி ஆகியன இணைந்திருந்தாலே, காரைநகரில் பெரும்பான்மை பெற்றிருக்கலாம். எனினும், சுயேச்சைக்குழுவினர், தமிழ் தேசிய பேரவையுடன் கூட்டணி வைப்பதில் உறுதியாக இருந்தனர். இதனால், யாழில் தமது பங்காளியான தமிழரசு கட்சியை கழற்றி விட்ட மணிவண்ணன் குழு, தமிழ் தேசிய பேரவையுடனான கூட்டில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

