பலாலி இராணுவ முகாமில் பணியாற்றி வந்த சிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தருக்கு, கடமைக்கிடையே ஏற்பட்ட திடீர் சுகவீனம்… மரணமாக முடிந்தது!
கண்டி – முறுத்தலை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய விதுர சஞ்சீவ மதுரட்ட, நேற்று திங்கட்கிழமை பணிக்காலத்திலேயே திடீரென நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டார்.
தற்போதைய தகவலின்படி, அவருக்கு முதலில் பலாலி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நிலை கவலைக்கிடமாக மாறியதை அடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டும்… சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
மாரடைப்பே மரணத்திற்கு காரணம் என உடற்கூற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.