கடந்த காலங்களில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இரண்டு பொது வைத்திய நிபுணர்கள் சேவையாற்றி வந்தனர். அண்மையில் ஏற்பட்ட வைத்தியர்கள் மீதான சமூக வலைத்தள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும், தனிமனித தாக்குதல்களும் வைத்தியசாலையில் நீண்ட காலமாக கடமையாற்றிய பொது வைத்திய நிபுணர்களை இடமாற்றம் பெற்றுக் கொள்வதற்கும், சேவையிலிருந்து நிரந்தர ஓய்வு விரும்பி பெற்றுக் கொள்வதற்கும்[20 வருடங்கள் பூர்த்தி] தூண்டி உள்ளமையினால் தற்சமயம் ஒரு பொது வைத்திய நிபுணர் கூட இல்லாத நிலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையானது இயங்குகின்றது.
தற்போது வைத்தியசாலையானது வட மாகாணத்தில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளில் உள்ள பொது வைத்திய நிபுணர்களை பகுதி நேரமாக கடமையாற்றினால் மாத்திரமே முன்பு போல் இயங்க முடியும். தற்போது உள்ள நிலைமையில் பொது வைத்திய நிபுணர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வர மறுப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பொறுப்பதிகாரிகள் கையறு நிலையில் இருக்கின்றனர் .