வடகொரியா புதிய வழிகாட்டும் அமைப்புடன் இயங்கும் 240 மில்லிமீற்றர் பல்குழல் எறிகணை செலுத்தியை சோதனை செய்தது என்று கொரியாவின் மத்திய செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்தது.
சோதனையில் இ்ந்த அமைப்பின் இயக்கம் மற்றும் தாக்குதலில் துல்லியம் மற்றும் செறிவு ஆகியவை மேம்படுத்தப்பட்டு்ள்ளது.
இந்த சோதனையை வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் மேற்பார்வையிட்டார்.
பியோங்யாங் இந்த வார தொடக்கத்தில் தற்கொலை ட்ரோன்களை சோதித்தது, அங்கு ஆளில்லா வாகனங்களுக்கு செயற்கை நுண்ணறிவை உருவாக்க ஆராய்ச்சியாளர்களை கிம் வலியுறுத்தினார்.
புதிய 240 மில்லிமீற்றர் பல்குழல் ஏறிகணை செலுத்தியானது தென்கொரியாவின் தலைநகர் சியோல் மற்றும் அருகில் உள்ள பகுதிகளைத் தாக்கும் திறன் கொண்டது.
புதிய பல்குழல் எறிகணை செலுத்திகள் 2024 ஆண்டும் மற்றும் 2026 ஆண்டுகளில் வடகொரிய இராணுவத்தில் மாற்று ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படும் என வடகொரியா அறிவித்தது.