HomeSri Lankaதமிழ்மாறன் மீது நடவடிக்கை!

தமிழ்மாறன் மீது நடவடிக்கை!

எமது பதிவின் எதிரொலி அடுத்த அதிரடி ஆரம்பம்- தமிழ்மாறன் மீது நடவடிக்கைகள்
முல்லைத்தீவு வலயக் கல்விப்பணிப்பாளரின் திருகு தாளங்கள்.. சட்ட நீதியான நடவடிக்கை எடுக்கவும் கல்விச் சேவை ஆணைக்குழு கடிதம்.

முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.தமிழ்மாறன் அவர்களின் தொடர் முறைகேடுகள் தொடர்பில் பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு முன்வைத்த முறைப்பாட்டை சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப விசாரணை செய்யுமாறு வட மாகாண பிரதமர் செயலாளருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளரான தமிழ் மாறன் தொடர்பில் பல்வேறு முறை பாடுகள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட நிலையில் கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்காமல் தட்டிக் கழிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற நிலையில் வடக்கு கல்வியில் உள்ள முறைகேடுகள் தொடர்பில் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பொதுச்சேவை ஆணைக்குழு கல்விச்சேவை ஆணைக்குழுவிற்க்கு பாரப்படுத்திய நிலையில், இம்முறைப்பாட்டை ஆராய்ந்த கல்விச்சேவை ஆணைக்குழு வலுவில் உள்ள சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக வடமாகாண பிரதம செயலாளர் அவர்களுக்கு பாரப்படுத்தி உள்ளார்கள்.

நடவடிக்கை எடுப்பாரா பிரதம செயலாளர்???

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments