Sunday, December 7, 2025
HomeSri Lankaஇலங்கை பெண்களுக்கு கொலைக்காரன் மீது காதல் - நாடாளுமன்றில் பொங்கியெழுந்த எம்.பி

இலங்கை பெண்களுக்கு கொலைக்காரன் மீது காதல் – நாடாளுமன்றில் பொங்கியெழுந்த எம்.பி

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை விவகாரம் தற்போது இலங்கையில் மிக்பெரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. நீதிமன்ற கூண்டிற்குள் வைத்து பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டார்.

அவர் படுகொலை செய்யப்பட்ட 8 மணிநேரத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவர் தொடர்பான புகைப்படங்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன. இந்தநிலையில், குறித்த கொலையாளி தொடர்பான புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட்டமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க சபையில் வைத்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

துப்பாகிதாரியை 8 மணிநேரத்திற்குள் கைது செய்தமை தொடர்பில் இலங்கை பொலிஸாரை பாராட்டிய அவர், அதேசமயம் குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,
“கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்கா ஒப்பந்தம் துபாயில் இருக்கும் ஒரு பாதாள உலகக் குழுவின் தலைவரால் வழங்கப்பட்டது. ஒரு குற்றவாளியை கைது செய்தாலும், உடந்தையாக இருந்த பெண்ணை கைது செய்வதற்கு பொலிஸாரால் முடியவில்லை.ஏன் ஒரு குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டீர்கள்.

குற்றவாளி கைது செய்யப்பட்டு வெளியான புகைப்படத்தைப் பார்த்து இங்கு காதல் செய்து கொண்டிருக்கின்றார்கள். குற்றவாளி மீது காதல் கொண்டு, காதல் வசனம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். புகைப்படத்தை வெளியிட்டு கொலைகாரனை காதலனாக மாற்றிவிட்டார்கள்“ என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments