Monday, December 23, 2024
HomePolticalபார் பெர்மிட்டில் சிக்கிய சுமந்திரன்

பார் பெர்மிட்டில் சிக்கிய சுமந்திரன்

மதுபான விற்பனை நிலைய அனுமதிப் பத்திர விபரக்கோவையை அநுரகுமார அரசாங்கம் விடுவதாக கூறி மக்களை ஏமாற்றி வருகின்ற நிலையில்
யாழ் குடாநாட்டைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் ஆதாரபூர்வமாக வெளியிட்டுள்ள தகவலின் படி சிக்கினார் ஆப்ரஹாம் சுமந்திரன்!

மதுபானத்துக்கெதிரான அமைப்பு என்ற பெயரில் ஆப்ரஹாம் சுமந்திரனும் அவரது வலது கையான சுகிர்தன் என்பவரும் தேர்தல் காலத்திற்கு மாத்திரமான அமைப்பொன்றை நடாத்திவருகின்ற நிலையிலேயே Bar Permit ( பார் பெர்மிட் ) அனுமதியையும் பெற்றுக்கொடுத்து பிரதம விருந்தினராக கலந்துகொண்டு திறப்புவிழாவினையும் சுமந்திரன் செய்திருப்பதாக அவர் படங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளார் ! ஆதாரம் இதோ…

ஊருக்கு உபதேசம் உனக்கு இல்லையடி போதகா

கோத்தபாய ராஜபக்க்ஷ ஆட்சிக்காலத்தில் 2021 ஆண்டு கொரோனா காலத்தில் யாழ்ப்பாணம் மானிப்பாய், கட்டுடையில் Momondo Restaurant and Hotal அமைப்பதற்கு உரிய சிபார்சினை ( அண்மையில் வாழ்வாதாரத்திற்கு பெண் ஒருவருக்கு விக்கினேஸ்வரன் பார் பெர்மிட் பெற்றுக்கொடுத்தது போன்று 😄😄) ஆப்ரஹாம் சுமந்திரன் வழங்கி அந்த மதுபான விற்பனை நிலையத்தினை ( Wine Stores ) இயங்க வைக்க முயற்சி எடுத்த வேளை அந்த ஊர் மக்களின், கடும் எதிர்ப்பு காரணமாக சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் அனுமதி வழங்க மறுத்த நிலையில்,
அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் முடிவெடுக்கும் பலமுடைய தலைவருமான AM சுமந்திரனின் சிபார்சில் மது விற்பனைக்கு என இல்லாது அங்கு வைத்து மது அருந்தி தங்கி செல்லலாம் எனவும் இதனை Restaurant and Hotel என்றவாறு செயற்பட அனுமதிக்குமாறு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம், வலிகாமம் தென் மேற்கு ( மானிப்பாய் ) பிரதேச சபை தவிசாளரிடமும், ஐனாதிபதி கோத்தபாயவின் நிதி அமைச்சின் அதிகாரிகளிடமும் கலந்துரையாடி அதற்கான அனுமதியை பெற்றுக்கொடுத்திருக்கிறார்.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள்.

இது மிக கடுமையான சுகாதார நெருக்கடியான கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பவம்… இதனை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் இணைந்து, வலி தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் , வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோர் Restaurant நாடாவை வெட்டி திறந்து வைத்துள்ளனர்.
இவருடைய பணி என்ன?

இதுவரை காலத்தில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் Restaurant bar திறப்பு விழாவிற்கு பிரதம விருந்தினராக சென்று திறந்ததில்லை..
அப்படி இருக்கையில் இன்றும் மானிப்பாய் வீதி கட்டுடையில் அமைந்துள்ள Momondo Restaurant நிலையத்தில் இன்றும் சுமந்திரனின் அணியினர், இந்த சாராயக்கடையில் தங்கியிருந்தே மது அருந்துவார்கள்..

சுமத்திரன் அணியின் மது விருந்து இந்த Restaurant இல் தான் நடக்கும், இது தெட்ட தெளிவான விடயம்.

இந்த Bar Restaurant உரிமையாளர் யார், இவருக்கும் சுமந்திரனுக்கும் என்ன தொடர்பு, இந்த Bar திறப்பதில் மக்களின் எதிர்ப்பை சுமந்திரன் எப்படி முறியடித்தார்.
இதனுடைய முழுமையான தகவலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வலிகாமம் தென் மேற்கு பிரதேச செயலகத்தில் (சண்டிலிப்பாய் ) பெற்று உண்மைகள் வெளிக்கொணரப்படும்.

யாழ்ப்பாண புலனாய்வு எனும் முகநூல் பக்கத்தில் வந்த செய்தியை அப்படியே தந்துள்ளோம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments