நேற்றைய தினம் பாராளுமன்றில் சாணக்கியன் எம்.பி பார் பெமிற் பெற்றவர்களின் விபரங்களை வெளியிடுமாறு கேட்டு இருந்தார். இது தொடர்பில் மிஸ்டர் டாக்குத்தர் எம்.பி ஒரு பதிவை பேஸ்புக்கில் போட்டுள்ளார்.
அந்த பதிவில்….
மட்டக்களப்பில் இருந்து வந்தவர் பார் பெமிட் விபரங்களை தருமாறு கத்திக் கொண்டிருக்கிறார்.. அவருக்கு பக்கத்தில் இருப்பவர் மதிப்பிற்குரிய பார் சிறி, கேட்காதது போன்று போனை பார்த்துக் கொண்டிருக்கிறார்..
100 வருடம் பழமையான கட்சி என்று சொன்னார்கள்..
மஹிந்த ராஜபக்ஷ அரசியலுக்கு கொண்டு வந்தவர் மட்டக்களப்பில் இருந்து தமிழரையே குத்தி கொல்லுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. அவர் நேற்றைய தினம் வீட்டுக்கு குண்டும் வைத்திருந்தார்..
போராளிகள் மட்டக்களப்பில் உயிரை துச்சம் என மதித்து நாட்டை மீட்டிக் கொண்டிருந்தபோது இந்த மும்மொழி புலி எங்கே இருந்தார் என்று கேட்கத் தோன்றியது.
தமிழன் மட்டுமல்ல ஒட்டு மொத்த போராளிகள் மற்றும் தேசிய தலைவரின் மனம் இவர்களின் வீட்டு அரசியலால் பிளந்து போய் நிற்கிறது. சபை சிரிக்கிறது லைவை பாருங்கள்..
என அருச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார்.
அருச்சுனா எம்.பியை விட சாணக்கியனுக்கு நான்கு வயதுகள் குறைவாகும். போராளிகள் மட்டக்களப்பில் உயிரை துச்சம் என மதித்து நாட்டை மீட்டிக் கொண்டிருந்த போது சாணக்கியன் எங்கே இருந்தார் என கேட்கும் அருச்சுனாவை பார்த்து இதே கேள்வியை கேட்டால்…..?