வைத்தியர் அர்ச்சனாவுடன் கூடவே இருக்கின்ற சட்டத்தரணி கெளசல்யா கடந்த 10.11.2024 அன்று இரவு 8.50 pm அளவில் யாழ்ப்பாணம் /போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு இடை நடுவில் மருத்துவ ஆலோசனைக்கு எதிராக வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
குறிப்பிட்ட தினத்தன்று இரவு 8.50 pm அளவில் தாங்க முடியாத தலையடி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வந்ததாக அனுமதிக்கும் வைத்தியரிடம் கூறி இருந்த கெளசல்யா நரேன், சிகிச்சைகளுக்காக விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு விடுதி இலக்கம் ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
விடுதி வைத்தியரின் சிகிச்சைகளின் போது தனது தலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் காரின் கதவை திறக்கும் போது ஏற்பட்ட பலத்த அடி காரணமாகவே அன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட தலை வலி நாளாக நாளாக அதிகரிப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இதற்காக அவருக்கு C.T ஸ்கேன் எடுக்கப்பட்டது, அதன் ரிப்போர்ட்டில் மூளையில் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டு நரம்பியல் நிபுணர் , சத்திர சிகிச்சை நிபுணர், நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் ஆகியோருடைய ஆலோசனைகள் மேலதிக சிகிச்சைக்காக வர வேண்டி இருக்கும் மேலும் தலையில் ஏற்பட்ட காயம் தொடர்பாக போலீஸ் விசாரணையும் மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்று கூறப்பட்டதை அடுத்து வைத்தியர் அர்ச்சுனாவினால் வற்புறுத்தலின் பெயரில் கௌசல்யா தனது கைப்பட தான் மருத்துவ ஆலோசனைக்கு எதிராக வெளியேறுவதாகவும், அதனால் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் தானே பொறுப்பாளி எனவும் எழுதி கையொப்பமிட்டு சென்றிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அன்றைய தினம் காலை வைத்தியர் அர்ச்சுனாவினால் வெளியிடப்பட்ட முகநூல் காணொளியில் தன்னுடன் கூட இருக்கும் கௌசல்யா தன்னை விட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில் அல்லது துரோகம் செய்யும் சந்தர்ப்பத்தில் தான் தலையில் சுட இருப்பதாக கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. எனவே கெளசல்யாவின் நண்பர்கள், குடும்ப அங்கத்தவர்கள், நலன் விரும்பிகள் இது தொடர்பாக கவனம் எடுத்து அவரைக் காப்பாற்றும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றது…
(Copied)