Monday, December 23, 2024
HomeKisuKisu39 நாளில் இலங்கையை சுற்றி வந்த 11 வயது கிளிநொச்சி மாணவன்

39 நாளில் இலங்கையை சுற்றி வந்த 11 வயது கிளிநொச்சி மாணவன்

39 நாட்களாக இலங்கையை நடைபயணம் மூலம் சுற்றி வந்த கிளிநொச்சி மகா வித்தியாலய தரம் 06 இல் கல்வி கற்கும் 11 வயது மாணவன் மு.டினோஜன் தனது பயணத்தை நேற்று (03) நிறைவு செய்தார்.

கிளிநொச்சி, கோணாவில் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் முரளீதரன் டினோஜன் என்ற மாணவன் சாதனை படைக்கும் நோக்குடன் கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி தனது தந்தையுடன் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து தனது நடைபயணத்தை ஆரம்பித்தார்.

இவர் இலங்கை பூராகவும் 39 நாட்களில் சுற்றி வந்து ஆரம்பித்த இடமான கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் நிறைவு செய்தார். குறித்த சிறுவனையும் தந்தையையும் விளையாட்டுக் கழகத்தினர் மக்கள் சேர்ந்து வரவேற்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments