பிரான்சின் றியேம்ஸ் பகுதியில் வசிக்கும் ஒரு தமிழ்க் குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு கடும் வன்முறையில் முடிந்துள்ளது. 41 வயதான கணவர், தனது மனைவியின் கையில் வைத்தியர் அர்ச்சுனாவின் உருவம் பச்சை குத்தியிருந்ததைக் கண்டு கோபத்தில் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. மனைவியின் கை, முகம் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரிக்ரொக் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பல பெண்கள் அர்ச்சுனாவுக்கு நிதி உதவி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம், வெளிநாடுகளில் வாழும் தமிழ்க் குடும்பங்களில் சமூக வலைதளங்கள் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் மற்றும் கருத்துக்கள், குடும்ப உறவுகளில் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் நிரூபிக்கிறது.