முல்லைத்தீவு, மாமூலைப் பகுதியில் நேற்று நடைபெற்ற கொடூர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது நண்பியை தேடி சென்ற இளம் யுவதி, நண்பியின் வீட்டில் தனிமையில் இருந்த இளைஞனால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட யுவதி, நண்பியின் வீட்டிற்கு சென்று யாரும் இல்லாததைக் கண்டு திரும்பும் வழியில், வீட்டில் தனியாக இருந்த இளைஞன் வற்புறுத்தலின் பேரில் வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு அந்த இளைஞன் தனது மிருகத்தனமான செயலைச் செய்துள்ளான். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான யுவதி, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், முள்ளியவளை பொலிஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.