Sunday, February 1, 2026
HomePolticalஅனைவருக்கும் வீட்டு வசதி; யாழில் ஜனாதிபதி சபதம்!

அனைவருக்கும் வீட்டு வசதி; யாழில் ஜனாதிபதி சபதம்!

“யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் முறையான வீட்டு வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே எமது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்” என ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் இன்று (16.01.2026) இடம்பெற்ற வீட்டுத் திட்ட மானியக் காசோலைகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • வீட்டுத் திட்டம்: நீண்டகாலமாகப் பூர்த்தியடையாமல் உள்ள வீட்டுத் திட்டங்கள் அனைத்தையும் நிறைவு செய்து, சொந்த வீடற்ற மக்களின் துயரம் துடைக்கப்படும்.

  • வாழ்வாதார மேம்பாடு: யாழ்ப்பாணத்தின் விவசாயம், சுற்றுலா, கடற்றொழில் மற்றும் சிறு கைத்தொழில் துறைகளை நவீனமயப்படுத்தி, மக்களின் வருமான வழிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  • உட்கட்டமைப்பு வசதிகள்: காங்கேசன்துறை துறைமுகம் துரிதமாகப் புனரமைக்கப்படும் என்பதுடன், விமான நிலையத்தின் குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்படும்.

  • விளையாட்டுத் துறை: மண்டைதீவு சர்வதேச துடுப்பாட்ட மைதானம் மற்றும் யாழ். உள்ளக விளையாட்டு அரங்கு ஆகியவற்றின் பணிகளை விரைவுபடுத்த அரசாங்க அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

  • இன நல்லிணக்கம்: நாட்டில் இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாதத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாது. சிதறடிக்கப்பட்ட மனங்களை ஒன்றிணைத்து, அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழும் வளமான பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டை உருவாக்குவதே இலக்காகும்.

எந்தவொரு நிலையிலும் மக்களைக் கைவிடப்போவதில்லை என உறுதியளித்த ஜனாதிபதி, நாட்டைக்கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments